வெள்ளி, 16 அக்டோபர், 2015

பூஜைகள் செய்ய புதிய யோசனைகள்.

சமீபகாலமாகப் பலவிதமான நிகழ்வுகளுக்கு இறைவன் கிருபையை வேண்டி விதம் விதமான பூஜைகளை, பூசகரைக் கொண்டு புரிவது நம்மின மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. ஆரம்பத்தில் கல்யாண வைபவம், அந்திரட்டி, ஆட்டத்திரி எனச் சிலவற்றுக்கு மட்டுமே செய்யப்பட்டுவந்த பூசைக் கிரிகைகள், மக்களிடையை வசதியும், செல்வமும் பெருக, இப்பொழுது பெரும்பாலோர் புது மனை புகுதல், பூப்புனித நீராட்டுதல், குழந்தை பிறந்த துடக்கு கழித்தல் எனப் பலவிதமானவற்றை 'வெகு விமரிசையாக' பூசகரைப் பிடித்து, மந்திரம் ஓதிப் பெரிய விழாக்கள் ஆக்கிவிட்டார்கள்., இதனால் இப்பூசகர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. ஏற்பட்ட மவுசினால், உண்மையில் இவர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அதனால்தானோ என்னவோ, மேலை நாடுகளில், மற்றைய தொழில் புரிபவர்கள் போலல்லாது, கோவில்களில் வேலையும் அளித்து, அருகினிலே வீடும் கொடுத்து, தனிப்பட்ட வெளி வேலையும் செய்யலாம் என்ற அனுமதியும் வழங்கி இருக்கும் ஒரே ஒரு தொழில் இந்தப் பூசகர் வேலைதான் என்பது உண்மையிலும் உண்மை. இவர்கள், மக்களின் கடவுள் நம்பிக்கையை பாவித்துப் பலவிதமான யுக்திகளின் மூலம் தங்கள் வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு போவதில் மிகவும் சாமர்த்தியர்கள். கடவுள் பயத்தினால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் பெரும் கூட்டமே இருப்பதனால், இவர்கள் பல புதிய காரணங்களைக் காட்டி, இல்லாததுக்கெல்லாம் செல்லாத மந்திரங்களைச் { படுபிழையாகச் சொன்னாலும் புரியாத மொழிதானே }சொல்லி, பொல்லாத பூசைகள் செய்து முடித்து ஒரு பெரிய தொகையை வசூலித்துக் கொள்ளுவர். சமீபத்தில் ஒரு குடும்பம் தங்கள் புதிய வீட்டுக்கு ஒரு பூசகரை அழைத்துப் பூசை செய்து குடி புகுந்து, முடிவில் அவருக்கு அவர் உள்ளம் மகிழப் பெரும் தொகை ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினர். வெளியில் வந்தவர், நின்று வீட்டைப் பார்த்து அவர்களின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை வைத்துச் சொன்னார், "உங்கள் வீடு நல்ல விசாலமாகவும் அழகாகவும் இருப்பதால் ஆட்களின் கண்ணூறு பட்டுவிடும். ஆதலால் இந்த நாவூறுகளில் இருந்து பாதுகாக்க வேறொரு பூசை கட்டாயம் செய்யவேண்டும்" என்று. உடனே இந்த 'அலுகோசுகள்' இன்னொரு 'நல்ல' நாளில் கட்டணம் செலுத்தி, மேலுமொரு பூசைசெய்துகொண்டதால் இப்பொழுது எல்லா நாவூறுகளில் இருந்தும் காப்பாற்றப்பட்டு நிம்மதியாக இருக்கின்றார்கள். தெரியாமல்தான் கேட்கிறேன்; வீடு குடிபுகும்போது செய்யும் பூசைகளே, இந்த வீட்டையும், இருப்பவர்களையும் கிரகங்களின் கெட்ட பார்வைகள், தீய சக்திகளின் கொடிய தாக்கங்கள், எதிர்மறையான அதிர்வுகள் முதலியவற்றில் இருந்து காப்பாற்றுவதற்குத்தானே செய்யப்படுகின்றன என்று சொல்லுகின்றார்கள். அப்படி என்றால், அந்தக் கணபதி ஹோமம், சங்கொலி, தேங்காய், வெற்றிலை, மாவிலை ஒன்றும் இவற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக இல்லையா? அடடே, யுத்தம், வெள்ளம், நில நடுக்கம் போன்றவற்றால் ஒரேசமயத்தில் தரைமட்டமாகும் வீடுகள் எல்லாம் இப்படியான கிரிகைகள் முறைப்படி செயயாதனால்தான் ஏற்பட்டதோ? அதனால்தான் சொல்கின்றேன், மனித குலம் பசி, பட்டினி, தோல்வி, அழிவு, விபத்து போன்றவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்றால் புதிய காரணிகள், புதிய பூசைகள், புதிய மந்திரங்கள், தேவையானவிடத்து புதிய கடவுள்களும் பிந்தாமல் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்கு, என் சின்ன மூளைக்கு எட்டிய சில புதிய யோசனைகளைத் தர விரும்புகின்றேன். சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் கட்டாயமாக, ஐயரை அழைத்து, முறைப்படி பூசை செய்து முடிப்பிக்கவேண்டும். * இறந்த ஒவ்வொருவரும் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்க, அவரவர் பிறந்த நாளில் ஓர் 'ஆசி பூசை'. *உறவாடா உறவுகள் உறவு வேண்டி ஒரு 'பந்த பூசை' *இருக்கும் உறவினர் உதவி கோரி ஒரு 'சொந்த பூசை' *பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ ஒரு 'பாச பூசை' *பணக்காரருடன் பலமான பிணைப்பு நிலைக்க ஒரு 'பிணைபூசை' * வீட்டினுள் பணம் கொட்ட, வருடா வருடம் ஒரு 'லட்சுமி பூசை *அயல் வீட்டாருடன் நட்புடன் இருக்க ஒரு 'நட்பு பூசை' *சாந்திமுகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் படுக்கையறையில் ஒரு'படுபூசை' *கருத்தரித்தால் ஒரு 'கரு பூசை' *கர்ப்பணிகளுக்கு ஒரு 'சிசு பூசை' *பிள்ளை நல்ல நாளில் பிறக்க 'கிரக பூசை' *பிள்ளை நல்லாய் பிறக்க 'நல பூசை' *பிள்ளைகள் பெயர் வைக்கும்போதும்,பல்லு முளைக்க , சிரிக்க, உடம்பு பிரட்ட, தவழ , உணவு அருந்த, நடக்க, கதைக்கத் தொடங்கும்போதும் ஒரு 'வளர்ச்சி பூசை'(இவற்றுக் கெல்லாம் அடிக்கொருக்கால் வர பூசகருக்கு சிரமமெனில் ஒருவர் இறந்தபின் 12 மாதமாசிகத்தானும் சேர்த்துக் கொடுப்பதுபோல் அவருக்கு கொடுக்கவேண்டியதை சேர்த்துக் கொடுத்தால் பெரும் பேறாகும்). *பிள்ளைகள் ஒவ்வொருவரும் பாடசாலை செல்லத் தொடங்கும்போதும், ஒவ்வொரு வகுப்பு மேலேறும்போதும் ஒரு 'பள்ளி பூசை'(மேற் கூறியதுபோல் 12 பூசையும் சேர்த்தும் செய்யலாம்). * சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி என்று எல்லா விஷேடங்களுக்கும் முறையான 'விஷேட பூசைகள்' *விசேட பரீட்சைகளில் பிள்ளைகள் அதி உயர் சித்தி அடைய ஒரு 'சித்தி பூசை.'. *பல்கலைக்கழகம் நுழையமுன் ஒரு 'நுழை பூசை' * படிப்பு முடித்து வேலை தொடங்கும்போது ஒரு 'வேலை பூசை * வேலையில் பதவி உயர்வு கிடைக்க ஒரு 'உயர்ச்சி பூசை" *ஒவ்வொருவரும் ஒரு கணனியோ, தொலைபேசியோ மற்றும் விளையாட்டுக் கருவியோ வேண்டும்போது அவை பழுதாகாமல் இருக்க ஒரு 'காவல் பூசை' *கணணி வைரசினால் தாக்கப்பட்டுப் பழுதாகாமல் இருக்க ஒரு 'வைரஸ் பூசை' *எந்தவொரு வண்டி வாங்கும்போதும் ஒரு 'வாகன பூசை' * விமானம் ஏறுமுன் ஒரு 'காப்பு பூசை' * விமானம் விட்டு இறங்கிய பின் ஒரு 'நன்றி பூசை' *தெருவில் இறங்கி பாதுகாப்போடு நடப்பதற்கு வருடம் ஒருமுறை என்றாலும் ஒரு 'விபத்து பூசை' *பிள்ளை வேண்டி ஒரு 'குழந்தை பூசை' * பிள்ளைகள் போதுமென்று கண்டால் ஒரு 'போதும் பூசை' * பிள்ளை பிறந்தால் ஒவ்வொரு மாசமும், பின்னர் ஒவ்வொரு வருஷமும் ஒரு 'சேம பூசை'. * மன அழுத்தம் வராமல் இருக்க ஒரு 'அழுத்த பூசை' *காதல் வராமக்காக்க ஒரு 'கட்டுபூசை' * காய்ச்சல் வராமல் இருக்க ஒரு 'காய்ச்சல் பூசை' * வயிற்றால் சுகமே போக ஒரு 'பேதி பூசை' *இதேபோல 'இருமல் பூசை', 'தடிமன் பூசை' என்று பல. *திருமண நினைவு நாளில் ' மண பூசை' * (அவர்கள் கோபித்துக் கொண்டாலும்)மற்றைய சமய கடவுள்களின் அனுக்கிரகம் கிடைக்க 'ஜேசு பூசை', 'அல்லா பூசை' என்று பலவும். இப்படி, இப்படி இஷ்டப்படி பலவிதமான காரணங்களுக்கு உரிய பூசைகளை எல்லாம் முறைப்படி செய்துவந்தால், பூசகர் குடும்பம் எந்தவொரு கஷ்டமும் இன்றி வாழ்வதுபோல நீங்களும் வாழலாம். ஏன் நினையாப் பிராகாரமாக இடருக்குள் விழவேண்டும்? எதற்கும், மண்டையைப் போட்டுக் குழப்பிச் சரியோ பிழையோ, விடயம் இருக்கோ இல்லையோ, அல்லது உண்மையோ பொய்யோ என்று ஆழ, அமர இருந்து பகுத்தறிய முனையாமல், எல்லோரும் செய்கிறார்கள்தானே என்றுவிட்டுப் புதிய இத்தகைய பூசைகளையும் சேர்த்துச் செய்யுங்கோவன்! என்ன, வாழ்க்கையில் ஒருமுறைதானே! என்றால்தானே அவர்களும் தொடர்ந்து பிழைக்கலாம்! (அவர்களும் பிழைத்தால் தானே)உங்களையும் வாழ வைக்கலாம்! பூசைகள் பல செய்து ஆசைகள் பல தீர்ந்து பெருவாழ்வு வாழ்வீர்! பி.கு.: *எந்தவொரு பூசையும் சேர்த்து எல்லோருக்கும் என்று ஒன்றாகச் செய்தால் பலன் கிடைக்காது. தனித்தனியே செய்தல் வேண்டும். *செய்யும் பூசைகளும், பூசைகளின் பெயர்களும் தமிழில் சொல்லாது சம்ஸ்கிருத மொழியில் சொன்னால்தான் சக்தி பலம். * பூசகருக்கு எவ்வளவுக்கு, எவ்வளவு கூடுதல் கூலி கொடுத்து அவரைச் சந்தோசப் படுத்துகின்றீர்களோ அவ்வளவுக்கு, அவ்வளவு பலனும் பெருகும். இதில் கஞ்சத்தனம் பார்த்தால் தண்டிக்கப் படுவீர்கள். *கூலியைப் பணமாகவோ, அவர்கள் விரும்பும் பொருளாகவோ கொடுக்கலாம். லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் கொடுப்பது பெரும்பாலும் விரும்பத்தக்கது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நகைக் கடன் பின்னணி

அபரிமிதமாகப் பெருகிக்கிடக்கின்றன அடகுக் கடைகள். முத்தூட் ஃபைனான்ஸ், முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸ், கொசமற்றம் ஃபைனான்ஸ்… என ஒவ்வொன்றும் சங்கிலித் தொடர் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்று, மிகப் பெரிய கார்ப்பரேட்களாக உருவெடுத்திருக்கின்றன. மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரிக்க, அதிகரிக்க… இந்த நகைக்கடைகளின் எண்ணிக்கையும் அவர்களின் லாபமும் அதிகரிக்கின்றன. விடிந்து எழுந்ததும் கையில் இருக்கும் கடைசி 100 ரூபாயுடன் டாஸ்மாக் வாசலில் காத்திருக்கும் தமிழன், தன்னிடம் இருக்கும் கடைசி கிராம் தங்கத்துடன் அடகுக் கடை வாசலில் தவம் கிடக்கிறான். இதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்தியர்களின் தங்க மோகத்தில் இருந்து தொடங்க வேண்டும். இந்தியாவைப்போல, தங்கத்தின் மீது மோகம் கொண்ட ஒரு நாடு உலகில் இல்லை. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மூட்டை மூட்டையாக அள்ளப்பட்ட தங்க நகைகளை வைத்து மொத்த இந்தியாவுக்கும் பட்ஜெட் போடலாம். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவாலியில் 50 மீட்டர் இடைவெளியில் 200 நகைக்கடைகள் இருக்கின்றன. வேலூரில் தங்கத்தாலேயே இழைத்து, கோயில் கட்டி ஆன்மிக சந்தை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் மொத்தத் தங்கத்தில் 11 சதவிகிதத்தை இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறும் 25 சதவிகிதம் குற்றங்களுக்கு தங்கம் சார்ந்த காரணங்களே பின்புலம். உலக தங்கக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் அளவு 22 ஆயிரம் டன்களுக்கும் அதிகம். உலகப் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த ‘2008 உலகப் பெருமந்தம்’ (Great Recession in 2008) நிகழ்ந்தபோதும் இந்தியர்களின் தங்கம் வாங்கும் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் என்பது ஒரு நம்பகமான சேமிப்பு என்பதைத் தாண்டி, அது சமூக கௌரவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 40 லட்ச ரூபாய்க்கு ஒரு கிரவுண்டு நிலம் வாங்கினால்கூட, அதைத் தூக்கி தலையில் வைத்துக்கொள்ள முடியாது. நகை வாங்கினால் அணிந்துகொண்டு தங்கள் கௌரவத்தை உலகத்துக்குப் பறைசாற்றலாம். அதனால்தான் மக்களின் தங்கப் பித்து இடைவிடாமல் தொடர்கிறது. ஆனால், வாங்கிய தங்கம் எல்லாம் அணிவதற்காக அல்ல. சரிபாதி அல்லது அதையும்விட அதிகமான நகைகள் அடகுக் கடைகளுக்கே செல்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடகுக் கடைகள் என்பவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். தங்க நகை மட்டும் அல்லாமல், பித்தளை பாத்திரங்களையும் அங்கு அடகு வைக்கலாம். அடகுக் கடை நடத்துபவர், சமூக மதிப்பில் சற்று கீழ் வைத்துதான் மதிப்பிடப்படுவார். நகையை அடகுவைக்கச் செல்பவர்கள் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் அதைச் செய்ய நினைப்பார்கள். அடகுபிடிப்பதும், அடகுவைப்பதும் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத, சங்கடமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது, இரு தரப்புக்கும் சங்கடம் இல்லை. ‘கையில இருக்கு தங்கம்… கவலை ஏன்டா சிங்கம்?’ எனத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து நம் நகைகளை அடகுவைக்க அறைகூவல் விடுக்கிறார்கள் நடிகர்கள். மூன்று நிமிடங்களில் ‘ஒண்ணுக்கு’க்கூடப் போக முடியாது. ஆனால் இவர்கள் ‘மூன்றே நிமிடங்களில் தங்க நகைக்கடன்’ தருவதாக அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அடகு என்பது சமூகத்தின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. ‘முத்தூட் ஃபைனான்ஸ்’தான் தங்க நகைக் கடன் வழங்குவதில் உலகிலேயே பெரிய நிறுவனம். இதற்கு இந்தியா முழுவதும் 4,256 கிளைகள் இருக்கின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கிக்கே, 2,100 கிளைகள் மட்டுமே. 2009-ல் இந்த நிறுவனத்துக்கு 985 கிளைகள்தான் இருந்தன. அதன் பிறகான இந்த ஐந்து ஆண்டுகளில் 3,000-த்துக்கும் அதிகமான புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. கணக்கிட்டுப்பார்த்தால் ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டு புதிய கிளைகள். 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஒரே நாளில் 103 புதிய கிளைகளைத் திறந்துள்ளது இந்த நிறுவனம். 8,500 கோடி ரூபாய் மதிப்புள்ள மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ்தான், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க நகை அடகு நிறுவனம். 2008-2009 நிதியாண்டில் 165 கோடியாக இருந்த இதன் வருவாய், 2012-2013ம் ஆண்டில் 2,217 கோடியாக அதிகரித்தது. நான்கே ஆண்டுகளில் வருவாய் விகிதம் மலைக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. குஜராத், அசாம், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார், டையூ டாமன் என இந்த நிறுவனத்துக்குக் கிளைகள் இல்லாத இடங்களே இல்லை. கேரளாவில் மோகன்லால், தமிழ்நாட்டில் விக்ரம், ஆந்திராவில் வெங்கடேஷ், கர்நாடகாவில் புனித் ராஜ்குமார், இந்தியில் அக்ஷய் குமார் என அந்தந்த மொழியின் முன்னணி சினிமா ஹீரோக்களைத் தன் விளம்பரத்தில் நடிக்கவைக்கிறது இந்த நிறுவனம். (கேரளாவில் மலபார் கோல்டு நிறுவனத்துக்கும் மோகன்லால்தான் விளம்பர அம்பாசிடர். மலபார் கோல்டில் தங்கம் வாங்கச் சொல்லும் மோகன்லால், மணப்புரம் கோல்டில் அடகு வைக்கச் சொல்கிறார்.) எதற்காக அடகு வைக்கின்றனர்? விவசாய கிராமங்களில் வெள்ளாமைத் தொடங்குகிற நேரத்தில் ஒவ்வொன்றுக்கும் பணம் வேண்டும். உழவுசெய்ய, நடவு நட, உரம் வாங்க எல்லாமே செலவுதான். கையிருப்பில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் அளவுக்குத் தமிழக விவசாயி வளமாக இல்லை. எனவே செலவை ஈடுகட்ட முதல் பலியாவது அந்த விவசாயியின் மனைவி அணிந்திருக்கும் தோடு, மூக்குத்தி, வளையல் போன்றவைதான். இதனால் விவசாயம் ஆரம்பிக்கும் காலத்தில் அருகில் உள்ள அடகுக் கடையின் வியாபாரம் ஏறுமுகத்தில் இருக்கிறது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குத் தொழிலுக்குச் செல்லும்போது பணம் தேவை. அதற்கும் அடகுக் கடைகளுக்குத்தான் செல்கின்றனர். மதுரை, தேனி சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்யாணம், காதுகுத்து போன்றவற்றுக்குச் செய்முறை செய்வதற்காகவே மக்கள் நகையை அடகு வைக்கின்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, நகைகள் அடகுக் கடைக்குச் செல்கின்றன. கல்யாணச் செலவுகளுக்காக, மகளின் பிரசவத்துக்காக, கோடை வெயிலைச் சமாளிக்க ஏ.சி வாங்க, இன்னோர் அவசரக் கடனை அடைப்பதற்காக… என நகையை அடகு வைக்கக் காரணங்களுக்குப் பஞ்சம் இல்லை. அதில் இரண்டு காரணங்கள் குறிப்பிட்டுக் கவனிக்கத் தகுந்தவை. ஒன்று மருத்துவச் செலவுகள். இன்று, நோயாளிகள் இல்லாத வீடு இல்லை. ஒரு திடீர் நோய், வாழ்நாள் சேமிப்பையே காவு வாங்கி குடும்பத்தை தெருவில் நிறுத்துகிறது. அரசு மருத்துவமனைகளின் அவலமும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவுகளின் அதிகரிப்பும் குடும்பத்தின் ஒரே சேமிப்பான நகைகளைக் காவு கேட்கிறது. மற்றொன்று கல்விச் செலவுகள். தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளைப் புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க பெற்றோர்கள் தயாராக இருக்கும்போது, நகையை அடகு வைக்கத் தயங்குவார்களா? ஒவ்வோர் ஆண்டும் பள்ளி தொடங்கும் நாட்கள்தான் அடகுக் கடைகளுக்கு அறுவடைக் காலம். பள்ளிகள் திறக்கும் காலத்தில் ‘ஸ்கூல் ஓப்பன் மேளா’ என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சில சலுகைகளையும் வழங்கி, மக்களை அடகு வைக்க ஊக்குவிக்கிறார்கள். மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சேர்மன் நந்தகுமார் தரும் தகவலின்படி, நகை அடகு வைப்பதற்கான காரணங்களில் இப்போது பிரதானமாகவும் முதன்மையானதாகவும் இருக்கின்றன கல்விச் செலவுகள். குறிப்பாக பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் நகர்ப்புறங்களில் அடகுக் கடைகளின் அதிகரிப்புக்கு ஆதாரமாக இருப்பது கல்விச் செலவுகள்தான். மணப்புரம் நிறுவனத்தின் வர்த்தகத்தில் 40 சதவிகிதம் பெருநகரங்களில் தான் நடக்கிறது. அரசு வங்கிகள் என்னவாயின? பொதுத்துறை வங்கிகளிலும் தங்க நகைகளை அடகு வைக்கலாம். இங்கு நகைக் கடனுக்கான வட்டிவிகிதம் மிகக் குறைவு. ஆனால், மக்கள் ஏன் இந்தத் தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால், பொதுத் துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கான நடைமுறைகள் சிக்கலானவை. பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படியே சமர்ப்பித்தாலும் நகையின் மதிப்பில் 60-70 சதவிகிதம் அளவுக்கே கடன் கிடைக்கும். கால் பவுன், அரை பவுன் எடுத்துச் சென்றால், அடகு பிடிக்க மறுக்கிறார்கள். குறைந்தபட்சம் 2 பவுன் அல்லது 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் அடகு வைக்க முடியும் எனத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். ஒவ்வொரு வங்கியிலும் இந்தக் கெடுபிடி வேறுபடுகிறது. மேலும், அடகு வைப்பதற்கு அந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சிறுநகர வங்கி ஒன்றில், நகையை அடகு வைப்பதற்காக ஒருவர் வந்தால், ஒரு நாள் ஓடிவிடுகிறது. ஆனால் தனியார் அடகு நிறுவனங்களில் அதிகபட்சம் 10 நிமிடங்கள்தான். 2 கிராம் எடுத்துச் சென்றால்கூட வாங்கிக்கொண்டு பணம் தருகிறார்கள். நகையையும் அடையாள அட்டையையும் மட்டும் எடுத்துச்சென்றால் போதும். அவர்களே நம்மைப் புகைப்படம் எடுத்து, அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்து, விண்ணப்பத்தை நிரப்பி, கையெழுத்துப் பெற்று பணத்தைத் தந்துவிடுகின்றனர். ஓர் ஊரில் இருந்து தொடர்ந்து 100 பேர் அடகு வைக்க வருகிறார்கள் என்றால், ‘எதுக்கு நீங்க இவ்வளவு தூரம் அலையிறீங்க? நாங்க வர்றோம்’ என அங்கும் ஒரு கிளை ஆரம்பித்துவிடும் அளவுக்கு அதிவேகத்தில் இருக்கிறது இவர்களின் கஸ்டமர் சர்வீஸ். கிராமப்புறங்களில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. இவற்றில் விவசாயத்துக்காக நகைகளை அடமானம் வைத்தால், ஆறு மாதங்கள் வரையிலும் வட்டியில்லா கடன் பெறலாம். பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுகுறித்த விவரமே தெரிவது இல்லை. அரசு இதுபற்றி எந்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தவும் இல்லை. இதனால் இந்தப் பணத்தை, அந்தக் கூட்டுறவு வங்கிக்கு தலைவர், செயலாளர் என நிர்வாகிகளாக இருப்பவர்களே பல்வேறு பினாமி பெயர்களில் அல்லது போலி நகைகளை வைத்து கடன் வாங்கி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். அடகுக் கடைகளால் ஆதாயமே இல்லையா? ‘இது கழுத்துல கிடந்ததைவிட கடையில இருந்த நாட்கள்தான் அதிகம்’ என்பது நம் அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வசனம். எவ்வளவோ சிரமங்களுக்கு இடையிலும் நம் குடும்பங்களில் தங்க நகை வாங்குவதே ஓர் ஆத்திர, அவசரத்துக்கு அடகு வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான். இதில் பெரும் பகுதி உண்மை இருக்கிறது. நான்கைந்து பவுன் நகையை வைத்துக்கொண்டு அடகு வைத்து, மீட்டு, மீண்டும் அடகு வைத்து, மறுபடியும் மீட்டு… இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடாத தமிழ்க் குடும்பம் ஏது? நம் ஒவ்வொருவரும் இதற்கு சாட்சிகளாக இருக்கிறோம். உறவுகள் உதவாத நிலையில், சுற்றம் கைவிட்ட நிலையில் தங்கள் கையிருப்புத் தங்கத்தை அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கின்றனர். இப்படி நகை அடகின் மூலம் கடும் துயரத்தின் கசப்பான தருணங்களை நீந்திக் கடந்தவர்கள் உண்டு. ஆனால், இது எல்லாம் உள்ளூர் நகைக் கடைகளில்தான். இந்தச் சங்கிலித் தொடர் அடகு நிறுவனங்களில் ஒரு நாள் வட்டி கட்டத் தவறினாலும் மீட்டர் வட்டி, கந்து வட்டியைவிட அதிகமாகப் போட்டுத் தாக்கிவிடுகின்றனர். இரண்டு, மூன்று மாதங்கள் கட்டாமல் விட்டுவிட்டால், பெரும் தொகை எகிறிவிடுகிறது. ‘பணத்தைக் கட்டி நகையை மீட்பதைவிட அப்படியே விட்டுவிடுவதுதான் லாபம்’ என நம்மையே எண்ண வைத்துவிடுவார்கள். சொல்லப்போனால் அதுதான் அவர்களின் நோக்கமும்கூட. அதனால்தான் நகையின் மதிப்பில் அதிகபட்சம் எவ்வளவு சதவிகிதம் தர முடியுமோ அவ்வளவு தருகின்றனர். அப்படி வழங்குவது, உங்கள் கஷ்டத்தைத் தீர்க்க நினைக்கும் கருணை அல்ல; சிக்கும்போது வளைத்துப்போட்டுவிடும் குள்ளநரித்தனம். மீட்கப்படாத நகைகள் என்னவாகின்றன? தினசரி செய்தித்தாளின் முழு இரண்டு பக்கங்களிலும் வெறும் எண்களாகத் தென்படும் விளம்பரத்தை நீங்கள் அவ்வப்போது பார்த்திருக்கலாம். ஏதோ ப்ளஸ் டூ பரீட்சை முடிவுபோல இருந்தாலும், அது தங்க நகை அடகுக்கடையின் ஏல அறிவிப்பு. நகையை அடகு வைத்து கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் வட்டியையும் அசலையும் கட்டி மீட்காததால், அடகுக் கடைகள் நகையை ஏலம் விடுகின்றன. செய்தித்தாளை வாசிக்கும் மக்கள், சுவாரஸ்யம் இல்லாத அந்தப் பக்கத்தைக் கடந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த எண்களின் உரிமையாளர்களுக்கு விளம்பரத்தைப் பார்க்கும்போது வலியும் வேதனையும் துளித் துளியாக அதிகரிக்கிறது. இவர்கள் வசூலிக்கும் வட்டியின் அளவைப் பாருங்கள். ஒரு மாதம் வரை 14 சதவிகிதம், ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை 17 சதவிகிதம் எனத் தொடங்கி, 12 மாதங்களுக்குப் பிறகு வட்டி 26 சதவிகிதம் ஆகிவிடுகிறது. சேட்டு கடையில் கொஞ்சம் முன்பின் இருந்தாலும் ஒரு நாள், ஒரு வாரம் அனுசரித்துப் பேசிக்கொள்ள முடியும். ஆனால் இங்கு, அரை நாள் தாண்டிலும் வட்டிவிகிதம் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுவிடும். பொதுவாக அடகு வைத்த நாளில் இருந்து ஓர் ஆண்டு ஏழு நாட்களானால், கெடு கடந்துவிட்டது எனப் பொருள். அந்த நகை ஏலம் விடப்படுவதற்கான தகுதியைப் பெற்றுவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதிவு அஞ்சலில் தெரியப்படுத்தி, நகைகள் ஏலம் விடப்படும். ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றாலும் பெரும்பாலும் தங்க நகை வியாபாரிகள்தான் வருவார்கள். நகையை உருக்கினால் என்ன மதிப்பு வரும் என்பதைக் கணக்கிட்டு அதன்படி ஏலம் எடுப்பார்கள். ஒரு பவுன், அரை பவுன் அடகு வைத்தவர்களில் இருந்து 50 பவுன் அடகு வைத்தவர்கள் வரை பலர் மீட்காமல் விடுகின்றனர். இப்படி மீட்காத நகைகளை ஏலம் விடுவது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அடகுக் கடைக்கு என்ன ஆதாயம்? பிரமாண்ட நகை அடகு நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலேயே நகையின் அதிகபட்ச மதிப்புக்குக் கடன் தந்துவிடுகின்றனர். ஆகவே, மீட்காமல் விடும் நகைகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகை அவர்களைப் பொறுத்தவரை சிறியது. வட்டியின் மூலம் ஒரு பெருந்தொகை கிடைக்கிறது. அதைவிட நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. சில தங்க நகை அடகு நிறுவனங்கள் மக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பொதுத் துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. நாம் நகைகளை அடகு வைக்கும்போது கையெழுத்திடும் ஆவணங்களைக்கொண்டு, அடமானக் காலத்தில் அந்த நகைகளை அவர்களின் சொத்துக்களாக (Asset) கணக்குக் காட்ட முடியும். அந்தச் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் மறு அடமானக் கடன் பெறுகின்றனர். அதாவது நாம் அடகு வைக்கும் நகைகளை அப்படியே எடுத்துச் சென்று மறு அடகு வைப்பது இல்லை. அந்த ஆவணங்களை மட்டுமே இப்படிச் செய்கிறார்கள். இப்படி பெறப்படும் கடனுக்கு சுமார் 10 முதல் 13 சதவிகிதம் வரையிலும் வட்டி. ஆனால், மக்களுக்கு வழங்கும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் இதைவிட அதிகம் என்பதை மேலே பார்த்தோம். நம் நகையைக்கொண்டே குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, நமக்கு அதிக வட்டிக்குக் கடன் தருகிறார்கள். இடைப்பட்ட வித்தியாசம் இவர்களுக்கு லாபம். இப்படியாக அரசின் விதிமுறைகளில் புகுந்து புறப்படும் இந்த அடகு நிறுவனங்கள் மக்களின் உழைப்பை தங்கள் லாபமாக மாற்றுகின்றன. பொருளாதார நெருக்கடி அதிகரிக்க… அதிகரிக்க… தங்கள் கையிருப்புத் தங்கத்தை அடகு வைத்து வாழவேண்டிய நிர்பந்தத்துக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். வேலைப்பறிப்புகளும், புதிய வேலை கிடைக்காத சூழலும் எல்லா துறைகளிலும் நிறைந்திருக்கும் இந்த நாட்களில், அடகுக் கடைக்கு அடிக்கடி போகவேண்டிய வாழ்க்கை நெருக்கடி உருவாகியிருக்கிறது. மக்கள் துயரத்தில் வாடும் இந்தக் காலம்தான் அடகுக் கடைகளின் அடைமழைக் காலம். அவர்களுக்கு எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம். ஆனால், இருக்கும் கடைசிக் குண்டுமணித் தங்கத்தையும் அடமானம் வைத்துதான் வாழ முடியும் என்ற நிலையில் தன் குடிமக்களை வைத்திருப்பது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா? தங்கம் எனும் மாயை! ”20 ஆண்டுகளுக்கு முன்பு உலகமயமாக்கல் அறிமுகமானபோது, இந்தியாவில் மக்களின் செலவிடும் ஆற்றலை ஓர் அளவுக்கு மேல் அதிகரிக்கவைக்க முடியவில்லை. ஆரம்ப ஆண்டுகளில் நிறுவனங்கள் இதில் தோல்வி அடைந்தன. இப்போதும் 20, 25 வயதை ஒட்டியிருக்கும் இளைஞர்கள்தான் செலவு செய்யும் பிரிவினராக இருக்கிறார்கள். கல்யாணம் முடிந்து, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் மிகவும் பொறுப்புடன் தங்கள் பணத்தைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர். இவர்களைச் செலவு செய்யவைக்க என்ன செய்வது? இந்திய மனம், தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக நம்புகிறது. உடனே நிறுவனங்கள் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம், சமூக கௌரவம் என்றெல்லாம் மாயைகளை உருவாக்கி, தங்கம் விற்பதில் வெற்றிகரமான நிலையை எட்டிவிட்டார்கள். இப்போது மக்கள் அனைவரது மனதிலும் தங்க மோகம் சுடர்விட்டு எரிகிறது. எல்லோருக்கும் தங்கம் வாங்க வேண்டும். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்யலாம்? வேறு ஏதோ அவசரத்துக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து, தங்கம் வாங்கிவிடுகின்றனர். பிறகு, அந்தத் தங்கத்தை அடகுவைத்து அவசரத் தேவையைச் சமாளிக்கின்றனர். வாங்கும்போதே ‘அடகு வைத்துகொள்ளலாம்’ என நினைத்து வாங்கப்படும் ஒரே சொத்து தங்கமாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் அது மங்கலகரமானது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது உங்கள் 100 ரூபாயில் நகைக் கடை, அடகுக் கடை என… இருவர் லாபம் பார்க்கிறார்கள். நாம் இவர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், இவற்றை வரம்பின்றி பயன்படுத்தும் போக்கு தவறானது என்பதை உணர வேண்டும்!” கூட்டுறவு வங்கிகள் எங்கே? க.கனகராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம் ”தனியார் அடகுக் கடைகளின் நோக்கமே, அடகு வைப்பவர்கள் நகையை மீட்கக் கூடாது என்பதுதான். அப்படி மீட்காமல் விட்டால்தான், அவர்களுக்கு ஆதாயம். அதனால் முடிந்தவரை, விரைவாகவும் அதிகமாகவும் பணம் தருகிறார்கள். முன்பு கிராமப்புறங்களில் கடன் வழங்கும் அமைப்பாக கூட்டுறவு வங்கிகள் இருந்தன. இப்போது பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் ஒழிக்கப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளைப் பதிலீடு செய்ய, அரசால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ‘மைக்ரோ ஃபைனான்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் பணத் தேவைக்கு அந்தப் பக்கம் நகர்ந்தார்கள். இப்போது மைக்ரோ ஃபைனான்ஸ்காரர்களும் குண்டர்களை வைத்து கடன் வசூலிக்கும் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் இறங்க ஆரம்பித்துவிட்டனர். தங்கள் சொந்த வங்கியைப்போல் உரிமையுடன் அணுகிய கூட்டுறவு வங்கி இல்லாத நிலையில், மக்கள் வேறு வழியின்றி தனியார் அடகுக் கடைகளை நோக்கி வருகின்றனர். அங்கு ஏழைகளிடம் எஞ்சியிருக்கும் கடைசி சேமிப்பையும் உறிஞ்சுகிறார்கள். இந்த நிலையை மாற்ற, அரசு வங்கிகள் தங்க நகைக்கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை மறுபடியும் பரவலாக்கி,அதில் இருக்கும் அரசியல் தலையீடுகளை நீக்கி ஜனநாயகப்படுத்த வேண்டும்!”

செவ்வாய், 11 நவம்பர், 2014

சத்து மாவு

சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையொ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். grains-pulses3 தேவையான பொருட்கள் கம்பு - 100 கிராம் ராகி - 100 கிராம் கோதுமை - 100 கிராம் பச்சஅரிசி - 100 கிராம் உளுந்து - 100 கிராம் பாசிப்பயறு - 100 கிராம் கொள்ளு - 100 கிராம் வேர்க்கடலை – 100 கிராம் முந்திரி - 100 கிராம் பாதாம் - 100 கிராம் ஏலக்காய் - 100 கிராம் ஜவ்வரிசி - 100 கிராம் மக்காச் சோளம் - 100 கிராம் கொண்டக்கடலை - 100 கிராம் பொட்டுக்கடலை - 100 கிராம் செய்முறை hp1 மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும். பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் வேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம். சத்துபானம் தயாரிக்கும் முறை milk-sugar1 தேவையான பொருட்கள் சத்துமாவு - 2 ஸ்பூன் பால் - 2 டம்ளர் தண்ணீர் - 2 டம்ளர் சர்க்கரை - தேவைக்கு செய்முறை hd ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும். கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு மானம் தயார் குறிப்பு வயதானவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் குடுக்கவும். சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும். அதிகம் சூடாக குடிக்கக் கூடாது.

திங்கள், 28 ஜூலை, 2014

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் ! இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஜோதிமாணிக்கம்" என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!. இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது?

வெள்ளி, 25 ஜூலை, 2014

நிஜமல்ல கதை..

"எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா’ இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படியுங்கள்! பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி. உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார். முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.” 2000 பேர் இடத்தை காலி செய்தார்கள். நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாது தான். இருந்தும் போகலையே! “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார். அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியே கிளம்பியது. கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.” இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”. சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது. ”அதை எல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி. ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி. இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி. ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ். டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்... “ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி. ” இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ - க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.” கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். கந்தசாமி ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு. நான் தூத்துக்குடி பக்கம். நீங்க?”- கேட்டது தமிழில். வேலை யாருக்குக் கிடைத்திருக்கும் என்று நீங்கள் நினக்கிறீர்கள்? நம்ப கந்தசாமிக்குத்தான்! வாழ்க கந்தசாமி! THANKS;NARESH.

வெள்ளி, 23 மே, 2014

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள்


நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும்.
விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றைச் சொல்லலாம்.
தாதுக்கள்: தாதுக்கள் எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. நம் உடம்பிற்கு பயன்படும் தாதுக்களுக்கு உதாரணமாக கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் குரோமியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்: இந்த ஊட்டசத்து நம் உடம்பில் நிகழும் தேவையற்ற ஆக்ஸைடேஷனை தடுக்க உதவுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக விட்டமின் இ, விட்டமின் உ மற்றும் செலேனியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
நார் சத்து: இதே நார் சத்துக்கள் நம் உடம்பிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது. உதாரணமாக சைலியம் பௌடர் , தவிடு ,மற்றும் பெக்டின் ஆகியவற்றை கூறலாம்.
என்சைம்கள்: நாம் உண்கின்ற உணவு செரிமானம் ஆவதற்கு இந்த என்சைம்கள்தான் உதவுகின்றன. நாம் உட்கொள்கின்ற மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என்று இவற்றையெல்லாம் ஜீரணம் செய்வதற்கு இந்த என்சைம்கள் உதவுகின்றன.
எண்ணெய்: நம் உடம்பிலுள்ள திசுக்கள் மற்றும் மூட்டுகளுக்கெல்லாம் நல்ல இயக்கம் வருவதற்கும் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கும் எண்ணெய் உதவுகின்றது. ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெயை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்துக்கள்
மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது ஆரோக்கியமான உணவு வகைகள் மேற்சொன்ன ஊட்டச்சத்துக்களை எல்லாம் நமக்கு வழங்கக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவு வகைகள் இந்த ஊட்டச் சத்துக்களை தராதவைகளாக இருக்கும்.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்
பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின் கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப் படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மேலும் இந்த பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை, பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், மீன் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள், சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். ஆனால் புல் தின்று வளரும் கால்நடைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவைகளினுடைய இறைச்சி ஆரோக்கியமான புரதமாகக் கருதப்படு கின்றது.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது. மீன் எண்ணை மற்றும் வால்நட் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா 3 என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.
மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள், பிராணிகளிடம் காணப்படும் சில ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள், ஒமேகா 6 )கொழுப்பு அமிலம் போன்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை ஆரோக்கிய மற்ற கொழுப்புச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மார்ஜரின், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் வறுவல் செய்யப்படுகின்ற பதார்த்தங்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகும். மேலும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில் ஆகியவை இரண்டும் ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை ஆரோக்கிய மற்ற கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படு கின்றது. மேற்கூறிய ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள் எல்லாம் நம்முடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியன.
மேற்சொன்ன ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரு பிரிவுகளின் கீழ் நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் பயனற்றது, பயனுள்ளது என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.

பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
 இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள் எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன் விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த சர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்து எல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரைமயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ள பயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தை அவை பாதிக்கின்றன.
2. பதப்படுத்தப்பட்ட வெள்ளைமாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால் செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக் வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த கூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழு கோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.
3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன் கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்த எண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.
உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவை அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில் இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.
4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிச உணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.
உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும் பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும். தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்த ஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவை நேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.
5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும் தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.
உடல் நலத் தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும் வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம் ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடைய உடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால் நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது.
ஐந்து பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
நம் உடம்பிற்கு ஏற்ற கெமிக்கல் பாலன்ஸை உண்டுபண்ணி நம் உடம்பை நன்றாகப் பராமரித்து நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த உணவுப் பண்டங்கள் 5 உள்ளன. அவையாவன. காய்கறிகள் மற்றும் பழவகைகள், வடிகட்டப்பட்ட தண்ணீர், மெலிந்த புரதச் சத்து, தனிப்பட்ட கலப்பில்லாத ஒமேகா 3 கொழுப்புச் சத்து மற்றும் முழு தானிய வகைகள்.
1. காய்கறிகள், பழவகைகள்: பயனுள்ள காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று நாம் நிறைய சொல்லலாம். பெரும்பாலான பயனுள்ள காய்கறிகளும், பழவகைகளும் நல்ல பிரகாசமான நிறம் கொண்டவைகளாக இருக்கும். முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் வகைகள் மற்றும் டர்னிப் ஆகியவைகளை உதாரணமாகச் சொல்லலாம். பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவைகளும் இவற்றில் அடங்கும். ஆப்பிள், திராட்சை, ஏப்ரிகாட், எலுமிச்சை, ஆரஞ்ச், பப்பாளி, மாதுளம்பழம் போன்ற பழங்களும் இவற்றில் சேரும்.
உடல்நலத் தாக்கம்: முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள் நிறைய நார்சத்து கொண்டவைகளாக இருப்பதால் உணவை நிதானமாக ஜீரணம் செய்ய உதவுகின்றது. அப்படி நிதானமாக ஜீரணம் செய்யும் பொழுது சர்க்கரை ரத்தத்தில் கலப்பதும் நிதானமாக நடக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழவகைகளும் இதேமாதிரியே செயல்படுகின்றன. இப்பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்திற்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றவும் உதவுகின்றது.
அதிக நார்ச்சத்து கிடைப்பது மட்டுமில்லாமல், மேற்கண்ட பழங்களும் காய்கறிகளும் புரதச்சத்து, என்சைம்கள் மற்றும் விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகின்றன. மேலும் இவற்றில் காணப்படுகின்ற பொட்டாசீயம், மக்னிசீயம். ஃபாலிக் ஆசிட் மற்றும் என்சைம்கள் நம்முடைய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமலும் வழி செய்கின்றது.
பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் நம் உடம்பிற்கு நல்ல கொலஸ்ட்ராலை வழங்குகின்றன. ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. ஏப்ரிகாட் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. மேலும் ஈரலின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. எலுமிச்சம் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உபயோகமான ஒன்று. ஏனென்றால், உடம்பில் சர்க்கரை அதிகமாக சேரும் பொழுது ஏற்படக் கூடிய கூடுதல் அமிலத்தன்மையை எலுமிச்சம்பழம் குறைக்கின்றது. மேலும் மற்ற பழங்களைவிட, எலுமிச்சம் பழத்தில் சர்க்கரை குறைவு. மேலும் நமது பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தவும் எலுமிச்சம் பழம் உதவுகின்றது. எலுமிச்சம் பழம் புளிப்பாக இருந்தாலும் உடம்பில் அதனுடைய செயல்பாடு காரத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. அமிலத்தன்மை உடம்பில் அதிகரிப்பதால் விளைகின்ற மூட்டுவலிக்கு இது ஓர் எதிர்ப்பாக அமையும். ஆங்கிலத்தில் கிரேப் புரூட் என்றழைக்கப்படும் பம்பளிமாஸ் பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. பம்பளிமாஸ் விதைகள் மலச்சிக்கல், வாயு தொந்திரவு ஆகியவற்றைத் தடுக்கின்றன. இந்த நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட காய்கறிகள் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று வருகின்ற ஆர்வத்தையும் குறைக்கின்றது. இருந்தாலும் வாழைப்பழம், பைன் ஆப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களில் நிறைய சர்க்கரை சத்து இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. வடிகட்டிய தண்ணீர்
: முனிசிபல் குழாய்களிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் என்று சொல்ல முடியாது. அதில் குளோரின், மற்றும் தேவையில்லாத தாதுக்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே முனிசிபல் குழாய்களில் வரும் தண்ணீரை வடிகட்டுவதற்காக வீட்டில் அக்வா கார்டு என்ற வடிகட்டும் மெஷினை வைத்துக் கொள்வது நல்லது. பழம் மற்றும் காய்கறிகளில் இருக்கின்ற நீர் குழாய்களில் வரும் நீரைவிடத் தூய்மையானது. காய்கறிகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறை அப்படியே சாப்பிட்டால், அது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. குடிநீரில் குளோரின் அதிகமாக இருந்தால் அதுவே சிறுநீரை சேகரிக்கும் பிளேடரில் புற்றுநோய் வருதற்கு காரணமாக அமையும். அக்வாகார்டின் மூலம் குளோரினை அகற்றி விட்டு அக்குடி நீரை உபயோகப்படுத்தினால், அக்குடி நீர் நம்மை பாதிக்காது.
உடல் நலத்தாக்கம்: தண்ணீரின் மூலமாகத்தான் நம் உடலிலுள்ள செல்களுக் கெல்லாம் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் செல்களுக்குள் தண்ணீர் இருப்பதால்தான் செல்களும் மென்மையாக இருக்கின்றன. நம் உடம்பின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் தண்ணீர் உதவுகின்றது. இப்படித் தண்ணீருக்கு பல உபயோகங்கள் இருப்பதால், இருப்பதிலேயே மிகச் சிறந்த தண்ணீரான வடிகட்டிய தண்ணீரை நம் உடம்பிற்கு வழங்குவது நல்லது. தண்ணீர் உடம்பிற்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் தவறுதான். நாம் அளவிற்கு அதிகமாக குடிக்கும் பொழுது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக நம் உடம்பிற்கு தேவையான பல வகை தாதுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறுவதால் இவற்றை யெல்லாம் உடம்பு இழக்க நேரிடும்.
3. மெலிந்த புரதச்சத்து: இந்தப் பிரிவின் கீழ் சால்மன், சார்டின், டூனா, மேக்கரல், டிலாப்பியா ஆகிய மீன் வகைகளும், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், தோல் எடுக்கப்பட்ட கோழிக்கறி, தோல் எடுக்கப்பட்ட வான் கோழிக்கறி, ஆட்டுப் பால், கொழுப்புச்சத்து குறைந்த தயிர், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் இட்ட முட்டைகள் ஆகியவை இவற்றில் அடங்கும். கடல்வாழ் உயிரினங்களான இறால், நண்டு போன்றவைகளும் இதில் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்
: மேற்கண்ட உணவு வகைகள் நம்முடம்பிற்குத் தேவையான அமினோ ஆசிடுகளை வழங்குகின்றன. அதே சமயத்தில் பால் பண்ணைகளில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வளரும் கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களையும் தவிர்க்கின்றன. மேலும் இந்த உணவு வகைகள் நம் ஈரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் க்ளோககான் என்ற சர்க்கரை பொருளை திறம்பட உபயோகிப்பதற்கு நம் உடம்பிற்கு உதவுகின்றன. திறம்பட உபயோகிப்பதால் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் சுரப்பு குறைவதால், கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் சத்து நம் உடம்பில் கூடுவதும் குறைகின்றது. புளிப்படைந்த தயிர் சாப்பிடுவதால் நம் சிறுகுடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவுகின்ற நுண்ணுயிர்கள் வளர்கின்றன. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகளை உண்ணும் பொழுது, அவைகளின் மூலம் நம்முடம்பிற்கு ஃபாலிக் ஆசிட், கோலின் மற்றும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவை மூன்றும் நம்முடைய இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புகளுக்கு உதவுகின்றன.

4. ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள்:
 இப்பிரிவின் கீழ் தனித்த ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, மற்றும் ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து ஆகியவை அடங்கும். தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயிலும், முந்திரி கொட்டைகளிலும், மணிலா கொட்டைகளிலும், ஆல்மண்ட் கொட்டைகளிலும் நிறைய இருக்கின்றது. மேலும் இந்தக் கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயில் 75 % அளவிற்கு இருக்கின்றது. மேலும் ஹைட்ரஜன் சேராத இந்த தனித்த கொழுப்புச்சத்தை உண்ணும் பொழுது, ஹைட்ரஜன் சேர்ந்த கொழுப்புச் சத்துக்கள், மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகியவற்றினால் விளைகின்ற உடல் நல பாதிப்புகள் இருப்பதில்லை. ஆகவே நாம் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு சிறந்த எண்ணெயாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச்சத்தும் ஓர் ஆரோக்கிய மான கொழுப்புச் சத்தாகும். இந்தக் கொழுப்புச் சத்து பூசணி விதைகள், வால்நட் கொட்டைகள் மற்றும் சால்மன், சார்டின், டூனா மற்றும் மேக்ரல் ஆகிய மீன் வகைகளில் கிடைக்கின்ற எண்ணெயிலும் இருக்கின்றது. ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் பார்ஸ்லி போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும். ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் வால்நட் கொட்டைகளிலும் மற்றும் சூரியகாந்தி விதைகளிலும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களும் அத்தியாவசிமான கொழுப்பு அமிலங்களும் நம்முடைய இதயம் மற்றும் ரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றன. உடம்பு இவற்றை தானே தயார் செய்து கொள்ள முடியாதபட்சத்தில் தாவர பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களிலிருந்து இவற்றை நம் உடம்பு சேகரிக்கின்றது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கெல்லாம் உதவுகின்றன. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்தை போல் நம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது இல்லை.

5. முழுதானியங்கள்:
 இப்பிரிவின் கீழ் பார்லி, ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்படாத முழு அரிசி ஆகியவை அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பி காம்பளக்ஸ் விட்டமின்கள், விட்டமின் உ, குரோமியம், மக்னீஷியம் போன்ற தாதுக்களும், செல்லுலோஸ் என்ற கரையாத நார்ச்சத்தும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: முழு ஓட்ஸ் தானியங்களில், 55 % கரைகின்ற நார்ச்சத்தும், 45 % கரையாத நார்ச்சத்தும் அடங்கி இருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. மேலும் நமக்கு ரத்த அழுத்தமும் குறைகின்றது. வெள்ளை ரொட்டியில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் நீக்கப்படுவதால், முழு தானியத்திலிருந்து செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அந்த ரொட்டியில் நமக்கு வேண்டிய புரதச்சத்து மற்றும் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து எல்லாம் அப்படியே இருக்கும். மேற்கூறிய 5 பயனுள்ள உணவு வகைகளும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை. ஆகவே இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ஜீரண சிஸ்டம் அதிக சிரமப்படாமல் வேலை செய்கின்றது.
பயனுள்ளவைகளாகக் கருதப்படும் உணவு வகைகள் எல்லாம் காரத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் நம் உடம்பை சுத்தப்படுத்தி நம்முடைய எடையை குறைக்கும் தன்மை கொண்டவை. பயனற்ற உணவுகளாக கருதப்படுபவை எல்லாம் அமிலத்தன்மை கொண்டிருப்பவை. அதே சமயத்தில் நம்முடம்பில் வேண்டாத கழிவுகள் சேகரமாவதற்கும் எடை கூடுவதற்கும் காரணமாக இருப்பவை. நம்முடைய உடம்பின் செல்களுக்குள் சேகரமாகும் அமிலக் கழிவுகள் நம்முடைய செல்களின் சுவர்களை இறுக வைக்கின்றது. இப்படி இறுகிப் போவதால் செல்களால் ஊட்டச் சத்துக்களை ரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் நம் உடம்பின் செல்கள் ஊட்டமின்றி பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இப்படி அமிலக் கழிவுகள் செல்களுக்குள் அதிகமாகச் சேர்வதால் நம்முடைய ஈரல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது.
பெரும்பாலானவர்கள் 80% அமிலத்தன்மை கொண்ட உணவுகளையும், 20% தான் காரத்தன்மைக் கொண்ட உணவுகளையும் சாப்பிடுகின்றார்கள். இதன் விளைவாக நம் உடம்பின் செயல்படும் திறன் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்த விகிதங்களை மாற்றி காரத்தன்மை கொண்ட உணவுகளை 80%ஆகவும், அமிலத் தன்மை கொண்ட உணவை 20%ஆகவும் நாம் மாற்ற வேண்டும். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை குறைக்கும் பொழுது அமில உணவுகளை உட்கொள்ளுவது குறைகின்றது. பச்சை காய்கறிகளை நிறைய உண்ணும் பொழுது காரத்தன்மை கொண்ட உணவுகள் நம் உடம்பில் அதிகம் சேருகின்றது.
நார்ச்சத்து: நார்ச்சத்து ஒரு பிரதான ஊட்டச்சத்தாகக் கருதப்படவில்லை. என்றாலும், 7 முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் குளுக்கோஸ் லெவலை குறைப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவுகின்றது. நார்ச்சத்து கரைவது, கரையாதது என்று இரு வகைப்படும்.
கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செறிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செறிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.
சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.
பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில் ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின் அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்று இனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோ சேர்க்காது.
உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களை உட்கொள்ளுவதை யும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம் அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித் தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால் செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்பு மற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக் கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதே சமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களை உட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.
உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.
காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்கு மட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம் மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்று அர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையான நிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாக சமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். கறி மற்றும் மீன் வகைகள் அதிக சூடு வைத்து வறுக்கும் பொழுது அவை நம் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களாக மாறுகின்றன. அளவுக்கு மீறிய சூடு வைக்கும் பொழுது கறி மற்றும் மீன் வகைகளிலுள்ள புரதச்சத்தும்,கொழுப்புச் சத்தும் அவற்றின் இயற்கை தன்மையை இழந்து சர்க்கரை நோயாளிகளுடைய ரத்தக் குழாய்களை பாதிக்கும் தன்மை பெறுகின்றன. இத்தகைய பாதிப்பு வரக் கூடாது என்றால் மெலிந்த கறித்துண்டுகளைக் குறைந்த வெப்பத்தில் அதிக நேரத்திற்கு நாம் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் கறியை வறுத்து எடுக்கும் பொழுது ஆலிவ் ஆயிலை நாம் தடவி விட்டோம் என்றால் வறுத்த கறி உடன் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கலாம்.
எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும் சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சை எண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்த எண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாத எண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுது சூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால் கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத் தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.
மைக்ரோவேவ் ஓவனில் குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமான என்சைம்களை அழித்துவிடக் கூடியவை.
பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக சாப்பிடு வது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக் கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மை சேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில் நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம் காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாக ஜீரணிக்கப்படுகின்றன.
பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக் கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட் பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.
பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடியை குறைக்கும் தன்மை கொண்டவை.

உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும் கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிக விட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கை உணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராது என்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள் அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.
கேன்களில் விற்கப்படும் பழங்கள் அதிக சர்க்கரை கொண்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இம்மாதிரி கேன்களில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் சூப் வகைகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்குமென்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லதாகும்.
உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக உடம்பில் சேர்ந்தால் நம் உடம்பிற்கு நல்லது இல்லை என்றாலும் சரியான அளவில் சாப்பிடும் பொழுது அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. கொலஸ்ட்ரால் நம்முடைய ஈரலில் தயாரிக்கப்படுகிறது. நம்முடைய உடம்பில் உள்ள செல்களுக்கு அது ஒரு திண்மை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் கூடுதலாக இருக்கும் பொழுது நம்முடைய ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்றாலும் அளவோடு அது இருக்கும் பொழுது இதயத்தை பாதிக்கக்கூடிய தனித்து சுதந்திரமாக இயங்கும் ஊணூஞுஞு திச்ஞீடிஞிச்டூண் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆக்ஸிஜன் கூறுகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
கொலஸ்ட்ராலை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நிறைய பேர் முட்டையை முழுவதுமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான அணுகு முறையாகும். ஏனென்றால் முட்டையில் நிறைய புரதச்சத்துள்ளது. இதில் சோளின் ஒமேகா 3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபாலிக் ஆசிட் ஆகியவை கிடைக்கின்றன. இவையெல்லாம் நம்முடைய இதயத்திற்கு நல்லதாகும். முட்டையில் 200 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுபோக 4 மி.கி. கொழுப்புச்சத்துள்ளது. இக்கொழுப்புச்சத்தில் 2.4 கிராம் தனித்த கலப்பில்லாத கொழுப்புச் சத்தாகும். 0.6 கிராம் அளவிற்கு கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்தும் உள்ளது. இவையிரண்டும் நல்ல வகையான கொழுப்புச் சத்தாகும். ஹைட்ரஜன் கலந்துள்ள தவிர்க்கப்பட வேண்டிய கொழுப்புச்சத்து முட்டையில் 1.6 கிராம் அளவிற்குத்தான் உள்ளது. முட்டையில் உள்ள மஞ்சளை நாம் விலக்கினோம் என்றால் அதன் வழியே நாம் கொலஸ்ட்ராலை தவிர்த்து விடலாம். முட்டையிலுள்ள வெள்ளை பாகத்தில் மஞ்சளில் இருப்பதைவிட அதிக புரதச்சத்துள்ளது. மேலும் அதே சமயத்தில் வெள்ளைப் பாகத்தில் கொலஸ்ட்ரால் எதுவுமேயில்லை.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதைப் பற்றி மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டிருப்பதைப் போல் கார்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது பற்றியும் அச்சம் எழுந்துள்ளது. மாவுச் சத்தை அறவே தவிர்ப்பது என்பதும் சரியில்லை. தேவையான அளவிற்கு நாம் காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை சாப்பிடவில்லை என்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை கிடைக்காது போய்விடும். இவை பற்றாக்குறையானால் நாளடைவில் உடம்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்:
தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
1. செயற்கை இனிப்புகள்: இந்த இனிப்புகளுடைய கலோரி மதிப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இனிப்புகள் நம்முடைய பசியைத் தூண்டிவிடுகின்றன. இந்த வகை இனிப்புகள் பல சாதாரண டேபிள் சர்க்கரையுடன் குளோரினை கலப்பதால் உண்டாக்கப்படுகின்றன. பிர்ச் மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சைலீட்டால் என்ற இயற்கையான சர்க்கரை இந்த செயற்கை இனிப்புகளைவிட நம் உடம்பிற்கு நல்லது. ஏனென்றால் சைலீட்டால் சாப்பிடும் பொழுது நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வேகமாக ஏறுவதில்லை.
2. அஸ்பிரின்: டாக்டர்கள் வலியை குறைப்பதற்கும், இதயத்தின் பாதுகாப் பிற்கும் நம்மை அஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அஸ்பிரின் சாப்பிடுவதால் நம்முடைய வயிறு புண்ணாகி வெந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே அஸ்பிரினுக்குப் பதிலாக மீன்எண்ணெய் மற்றும் இஞ்சியைச் சாப்பிட்டால் நாம் விரும்பும் பாதுகாப்பு நம் இதயத்திற்குக் கிடைக்கும்.
3. பாட்டில் ஜுஸ்: இந்தப் பழச்சாறுகளில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருப்பதால் பழச்சாறை சாப்பிட்டவுடன் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறுகிறது. பதப்படுத்தப்பட்ட பழங்களிலிருந்துதான் இந்த பாட்டில் ஜுஸ் செய்யப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது இந்தப் பழங்களிலுள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையெல்லாம் வீணாகிப் போகின்றன.
4. பாட்டில் குடிநீர்: மினரல் வாட்டர் பாட்டில் என்று விற்கப்படுகின்ற இந்த குடிநீர் பாட்டில்கள் இவைகளை விற்கும் கம்பெனிகள் சொல்வதைப் போல கிருமிகள் இல்லாமல் இருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆகவே அவரவர் வீட்டில் காய்ச்சிய வடிகட்டி பெறப்படும் குடிநீரை குடிப்பது நல்லது.
5. கால்சீயம் மாத்திரைகள்: கால்சீயம் கார்பனேட் கலந்துள்ள இந்த மாத்திரைகள் எலும்பு மெலிவு நோயை தவிர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் இந்த மாத்திரைகளில் காணப்படும் கால்சீயம் நாளைடைவில் நம் உடம்பில் சேர்ந்து சிறுநீரகத்தில் கல்லாக மாற வாய்ப்புள்ளது. நம்முடைய வழக்கமான உணவிலேயே நிறைய கால்சியம் இருப்பதால் நாம் இப்படி செயற்கை கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடத் தேவையில்லை.
6. சீரியல்: கடைகளில் விற்கப்படும் ஓட்ஸ் சீரியல் போன்றவைகளெல்லாம் மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவையாகும். அதே சமயத்தில் செயற்கை விட்டமின்களும் அதில் கலந்துள்ளன. மேலும் இப்படிப்பட்ட சீரியல்களில் சர்க்கரை அதிகமாகவும், இயற்கை விட்டமின்களும், நார்ச்சத்துக்களும் குறைவாகவும் இருக்கும். ஆகவே உண்மையிலேயே ஊட்டம் மிக்க காலை உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த சீரியல்களுக்குப் பதிலாக முழுமையான தானியங்களால் செய்யப்பட்ட சீரியல்களை உணவாக உட்கொள்ள வேண்டும்.
7. பால்: பால் மூலம் நமக்கு நிறைய கால்ஷியம் கிடைக்கிறது என்றாலும் நாம் பாலை அதிகமாக உட்கொண்டால் நம் உடம்பில் மக்னீஷியம் சேருவது தடைப்படும். அது நமக்கு நல்லதில்லை. ஏனெனில் மக்னீஷியம் நம் உடம்பிற்குத் தேவையான ஒரு ஊட்டமாகும். sterilized செய்யும் பொழுது பாலில் உள்ள கேசின் என்ற பால் புரோட்டீன் கெட்டுவிடுகிறது. அது கெடுவதால் உடம்பிற்குத் தேவையான என்ஸைம்கள் மற்றும் விட்டமின்கள் ஆ-6 மற்றும் ஆ-12 ஆகியவற்றையும் சேர்த்துக் கெடுக்கிறது. மேலும் sterilized செய்யும் பொழுது பாலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன. ஆகையால் நமக்கு கால்ஷியம் வேண்டுமென்றால் பாலுக்குப் பதிலாக சார்டின் மீன்களிலிருந்தும், கொட்டைகளிலிருந்தும் பெற்றுக் கொள்வது நல்லது.
8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.

9. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்:
 இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.
10. மாற்று கொழுப்புச்சத்து இல்லாத உணவுப் பண்டங்கள்: சில உணவுப் பண்டங்களில் இப்படியொரு முத்திரை குத்தி இருந்தாலும் அதனால் மாற்று கொழுப்புச் சத்து இல்லையென்றோ, ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இல்லை என்றோ அர்த்தமில்லை. ஒரு கரண்டி அளவிற்கு எடுத்துக் கொண்டால் அதில் 0.4 அளவிற்கு மாற்று கொழுப்புச் சத்து இருந்தால்தான் நாம் உண்மையில் மாற்று கொழுப்புச் சத்து இல்லை என்று சொல்லலாம். கச்ஞிடுடிணஞ் உள்ளிருக்கும் உணவுப் பண்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இருக்கின்றதா இல்லையா என்று தெரியும்.
11. பீட்ஸா: பீட்ஸா உலகம் முழுவதும் பாப்புலராகி விட்டது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால் பீட்ஸாவிலுள்ள இடஞுஞுண்ஞுஇல் ஹைட்ரஜன் கலந்து கொழுப்புச் சத்து இருக்கிறது. அதிலுள்ள கறியிலுமிருக்கிறது. அதிலுள்ள கோதுமையில் மாவுச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆகவே, அசைவ பீட்ஸாவைவிட சைவ பீட்ஸாவை சாப்பிடுவதே நல்லது.
12. சோடா: சோடா பாப்புலரான பானமாக இருந்தாலும் அதில் நிறைய சர்க்கரை இருக்கிறது. மேலும் அதில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த பாஸ்பரஸ் கால்சியம் உடம்பில் சேர்வதைத் தடுக்கிறது. இதன் காரணமாக உடம்பில் அமிலத் தன்மை அதிகமாகிறது. 12 அவுன்ஸ் சோடா பாட்டிலில் 10 டீஸ்பூன் அளவிற்காவது சர்க்கரையிருக்கும். அது 120 கலோரிக்குச் சமமாகும்.
13. சர்க்கரையில்லாத தின்பண்டங்கள்: சர்க்கரையில்லாத திண்பண்டங்களில் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் பசியைத் தூண்டும் மறைமுகமான சர்க்கரை பொருட்கள் உள்ளன. இவற்றின் காரணமாக நம் உடலில் கூடுதல் கொழுப்புச் சத்து சேருகிறது.
14. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவும், பிறசத்துகள் அதிகமாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
15. தயிர்: இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்
இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.
உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
தேவையில்லாத பசி எடுக்கிறதென்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். உடம்பிற்குத் தேவையானது விட்டமின்களும் தாதுக்களும் என்று புரிந்து கொள்ளாமல் நோயாளி கூடுதலாக மாவுச் சத்து மிகுந்த பண்டங்களைச் சாப்பிட்டால் உடம்பு வழங்கும் சிக்னலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றாகிறது. அதனால் இந்தப் பசி மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது. இந்தப் பசி இரு வகையானது. 1.உணர்வு மயமான பசி, 2. உடல் ரீதியான பசி.
1. உணர்வுமயமான பசி: நாம் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் செரடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. அது சுரக்கும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகரிக்கிறது. இதனால்தான் வருத்தமாக இருப்பவர்கள் அந்த நேரம் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். இப்படி ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக இந்த வருத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது யாரேனும் நண்பரோடு பேசலாம். இப்படி செய்வதாலும் வருத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு.
பண்டிகை நாட்களிலும், கொண்டாட்டங்கள் நிகழும் நாட்களிலும் மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதுண்டு. இதற்குப் பரிகாரமாக பண்டிகை நாட்களுக்கு முன்பே 5 நாட்களுக்கு நல்ல சாப்பாட்டை நிறைய சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது பண்டிகை நாளன்று அதிகமாக சாப்பிட முடியாது. மேலும் பண்டிகை நாளுக்கு அடுத்த நாளும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, அதே சமயத்தில் நிறைய தண்ணீரும் குடித்தால், பண்டிகையன்று சாப்பிட்டதெல்லாம் சீக்கிரம் வெளியேறிவிடும்.
2. உடல் ரீதியான பசி: ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது சர்க்கரை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் வேகமாக ஏறுகிறது. ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் பின்னர் இறங்கியும் விடுகிறது. அதற்குப் பரிகாரமாக நிறைய நார்ச்சத்தையும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும், ப்ராக்கோலி மற்றும் பழவகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை குடிப்பதற்குப் பதிலாக காய்கறி சாற்றை சாப்பிடுவது நல்லது.

வியாழன், 15 மே, 2014

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.

ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.. அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.. ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.. இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே
என்று பாய.. அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா…
என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.. உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை…
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ முடியும்…
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..