புதன், 23 ஏப்ரல், 2014

8 நடை போட்டு நோயை எட்ட விரட்டுங்கள் 4

நடப்பது என்றால் வெளியில் சென்று தான் நடக்கனும்னு இல்ல. வீட்லயே கூட நடக்கலாம். வாக்கிங் நல்லது, தினமும் அரை மணி நேரம் நடந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் வெளியில் சென்று நடப்பதில் சிரமங்களும் இருக்கு. 
அசுத்தமான காற்று, வண்டிகளின் புகை, ட்ராபிக், அப்புறம் வேகமாக நடந்தால் உடல் சோர்ந்து போகுதல் எல்லாம்.
நாம வீட்ல இருந்தே எட்டு 8 போட்டு நடந்தால் எந்த சிரமமும் தெரியாது, ரிலாக்சா நடக்கலாம். விறைப்பாக நடக்க கூடாது,
எட்டு எண்ணும் எண்ணை தரையில் வரைந்து அதன் மீது நடந்திருங்கள், நீளம் 5 முதல் 6 அடி இருக்கலாம். அகலம் 8 முதல் 10 அடிகள் இருக்கலாம்.


குணமாகும் கட்டுப்பாட்டுக்குள் வரும் நோ ய் க ள் ;

தேவையற்ற கொழுப்புகள் கரையும்
மூட்டு வலி சீராகும்
மார்பு சளி சரியாகும்
உடற்கழிவுகள் முறையாக வெளியேறும்
உடலுக்கு தேவையான பிராணசக்தி கிடைக்கும்
வயிறு உப்புசம் சரியாகும்
சர்க்கரை நோய் குணமாகும்
தூக்கமின்மை சரியாகும்
மன இறுக்கம் மறையும்
இரத்த அழுத்தம் சீராகும்
ஒரு சில நோய்கள் சில மாதங்களில் முழுவதும் குணமாகிவிடும்.

எட்டு நடை நடக்க ஆரமித்த சில நிமிடங்களிலேயே மனம் ஒடுங்க ஆரம்பிக்கும்.
10- 15 நிமிடங்களில் சுவாசம் சுழுமுனை ஓட்டத்திற்கு மாறும்.
30 நிமிடங்களில் கடப்பதற்குள் இயல்பான தியான நிலைக்கு கொண்டு செல்லும்.
முப்பது நிமிடங்கள் நடந்தாலும் உடல் களைப்பு தெரியாது, உற்சாகம் பெருகும். 
ஆகவே உடலும் மனமும் இயல்பாகவே தியான நிலைக்கு தயாராகி விடும்

8 நடை போட்டு நோயை எட்ட விரட்டுங்கள் 3

“எட்டு” நடை பயிற்சி முறை


ஒருவர் தினமும் 3௦ முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல்  எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச்சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்

8_walk_how

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது  21 நாட்கள்செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான முத்திரையில் நடக்கலாம்.

பலன்கள்


தினமும் “எட்டு” நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம்,  போன்ற கொடிய நோய்கள் கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன.  நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது  21 நாட்கள் செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடனும் நலமுடனும்.

8 நடை போட்டு நோயை எட்ட விரட்டுங்கள் 2


SUNDAY, AUGU


டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, “நன்றும் தீதும் பிறர் தரவாரா!” இதன்பொருள் “நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நோயி ன்றி நலமுடன் வாழ முடியும்.
மேற்கண்டவற்றில் உடற்பயிற்சி பற்றி சற்று விரிவாகப் பார்ப் போம். தற்போதைய விஞ்ஞான யுகத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லா வயதினரும் முறை யான உடற்பயிற்சி செய்வது கடினம்.
இதற்கு சரியான மாற்று வழி என்ன?
நடைப்பயிற்சி ஒன்றுதான்! ஆண், பெண், சிறு வர் சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நடைப் பயிற்சிதான்!
நடைப்பயிற்சியில் சாதாரண நடை, வேக நடை, நடை ஓட்டம், ஓட்டம் இப்படி பல வகை உண்டு. அவரவர் வயது, உடல்நிலை, சூழ் நிலை, மனநிலைக்கேற்ப நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்!
நடைப்பயிற்சிக்கு முன்:

* முதல்நாள் இரவு உணவை நீங் கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உண் ண   வேண்டும்.
*தூங்குவதற்கு முன்பாக பல் துல க்க வேண்டும்.
* இரவு 10 மணிக்குப் பிறகு அவ சியம் தூங்கிவிட வேண்டும்.
* காலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக படுக்கையிலிருந்து எழுந் துவிடவேண்டும்.
* எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் காலைக் கடனை முடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இருப்பின் “இயற்கை எனி மா” கருவி மூலம் குடலைக் கழுவ வேண்டும்.
* நடைப்பயிற்சிக்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.
நடைப்பயிற்சி:
* போக்குவரத்து இல்லாத, சுற்றுப்புறக் காற்று மாசுபடாத நிலை யில் உள்ள இடத்தில் நடக்க வேண்டும்.
* வயல் வெளிகளில் நடக்கலாம்.
* வீட்டு மொட்டை மாடி, வீட்டுத் தாழ்வாரம் ஆகிய இடங்களில் நடக் க லாம்.
* வீட்டுக்கு வெளியில் போக முடி யாத சூழ்நிலையில் உள்ள பெண் கள் 10 x 10 உள்ள தாழ்வாரம், கூடம், அறையில் “8″ என்ற எண்களை வரைந்து அதன் மேலேயே நடந்து பழகலாம்.
* கடற்கரை ஓரம், ஏரிக்கரை, குளக் கரை, கண்மாய்க்கரை ஆகிய இட ங்களில் நடக்கலாம்.
* நடக்கும்போது தலைநிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, இரு கைக ளையும் நன்றாக வீசி பட்டாள நடை நடக்க வேண்டும்.
உடல் முழுதும், வியர் த்துக் கொட்டினாலும் கவ லைப்படாமல் நடக்க வேண்டும்.
* தினமும் காலை குறை ந்தது மூன்று கிலோ மீட் டர் தூரம் நடக்க வேண் டும். தூரத்தை விட நேர ம் தான் முக்கியம்.
* மாலையில் உடலில் வெய்யில்படுமாறு நடந்தால் மிக நல்லது!
நடப்பதால் என்ன நன்மை?
* உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.
* உடலும், மனமும் இளமையாகவு ம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியு டனும் இருக்கும்.
* நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக இய ங்கும்.
* நுரையீரல் வலுவடையும், மார்புச் சளி குணமாகும்.
* இதயம் சீராக இயங்கும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி யடையும்.
குண்டான உடல் மெலியும், தொப் பை மறையும்.
* மன அழுத்தம் குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
* ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத் தம் ஆகிய நோய்கள் குணமாகும்.
* கண் பார்வை தெளிவாகும். இர வில் நன்றாகத் தூக்கம் வரும்.
* முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும்.
* இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.
* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதி யடையும்.
* நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக் காது.
* நோயின்றி நீண்ட நாட்கள் வாழ முடியும்.
* முதுகு வலி, மூட்டு வலி குண மாகும். உடலிலுள்ள திசுக்களு க்கு உயர்க்காற்று நிறைய கிடைக்கிறது.
* கால்களின் தசைகளுக்கு தாங்கும் சக்தி கிடைக்கும்.
* மன இறுக்கம் (டென்ஷன்) குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
 * சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
* உடல் முழுவதும் மின்சாரம் பாய் வது போல் அற்புத உணர்வு பரவும்.
* மாலை வெய்யிலில் தினமும் நடந் தால் தோல் நோய்கள் வராது.
மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில் லாதது நடைப்பயிற்சி. நடைப் பயி ற்சி முடிந்து வியர்வை அடங்கியபிறகு சுமார் பதினைந்து நிமிடங் களுக்கு ப்பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடை ப்பயிற்சி முடிந்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக்குளிக்க வேண் டும். இதனால் தலை யில் உள்ள சூடு குறைந்து மறையும். தலைக்குத் தண்ணீர், ஊற்றிக் குளிக்காமல், உட ம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம். நடைப்பயிற்சியின் போது உடலி லுள்ள 72,000 நாடி நரம்புக ளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடை கிறது.
“நடைப்பயிற்சி செய்யாதவர்களுக் கெல்லாம் மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையைத் தட்டிப் போடு கிறது” என்பதை மறவாதீர்கள். “சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரி விகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்க ளிடம் காசு வாங்காத டாக்டர்கள்!” என்பதை நினைவில் கொள்ளு ங்கள்.

8 நடை போட்டு நோயை எட்ட விரட்டுங்கள் 1

‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!



இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.

உலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும். 

அறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.

ஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்? 

அப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர்? (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்) 

இன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.

சிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.

ஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும்.

‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)

இப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.

இந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது.

மாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.

ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது?

பல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.
பல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.
சில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.

ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. 

ஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை.

அவ்வளவு கூட்டம்!

தினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.

நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.

சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.

சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.
மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.

அதுதான் எட்டு நடை!

எட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.

அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.

மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.

இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்

மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.  

அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.
அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.

இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.

 எட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.

இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட 
பிரச்சினைகள் விலகும்.

ரத்த ஓட்டம் சீர்ப்படும்.

ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.

தூக்கமின்மை சரியாகும்.

அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.
ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.

அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.

இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.

நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.
ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம்.

இந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. 

இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். 

சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.

இந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்.

என்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.

தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.

கால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.

எல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
காசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா? 

எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்!

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கலிகால சாமியார்கள்


கமலஹாசனின் ஒரு வசனம். ”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால், நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. இவை கற்பக விருட்சங்களாக வாழ்கின்ற தத்துவப் பாசுரங்கள். மனிதனில் எவனும் கடவுள் இல்லை. எந்த ஒரு மனிதன் தன்னை ஒரு கடவுள் என்று சொல்கிறானோ, அவன் மனிதனே இல்லை.


இப்போது கலியுகம் நடக்கிறது. அந்த யுகம் கண் சிமிட்டிய நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன். நல்ல சாமியார் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போகின்றார்கள். கையை நீட்டச் சொல்லி, நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்.


இங்கே ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். சாமியார்கள் யாரையும் நாம் குறை சொல்லவில்லை. உண்மையான, நல்ல சாமியார்கள் இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாணயமாக ஆன்மீகச் சேவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை நாம் மதிக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஆனால், அந்தச் சாமியார் கூட்டத்திலேயே பசுத் தோல் போர்த்திய புலிகளும் இருக்கின்றன. மான்தோல் போர்த்திய முதலைகளும் இருக்கின்றன. அந்தக் கார்ப்பரேட் புலிகளும், அந்தக் கார்ப்பரேட் முதலைகளும் எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கின்றன. எத்தனைப் பெண்களை நாசமாக்கி நடுத்தெருவில் விட்டு இருக்கின்றன. எத்தனை ஏழைகளின் வயிற்றில் அடித்து கருவை நசுக்கி இருக்கின்றன. எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் கழிசடை ஆக்கி இருக்கின்றன. எத்தனைப் பேரைக் கொலை செய்து மாலைகள் போட்டு இருக்கின்றன. அந்த ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை.


கார்ப்பரேட் சாமியார்கள் பிரம்ம மந்திரங்களைப் பாடினார்கள். மன்னிக்கவும். பிரம்ம மந்திரங்கள் என்பது புனிதமானச் சொற்கள். இருந்தாலும் அதைப் பாடித்தானே கார்ப்பரேட் சாமியார்கள் கோடிக் கோடியாய்ச் சுருட்டினார்கள். கதைக்கு வருகிறேன். ரமண ரிஷியை உங்களுக்குத் தெரியும் தானே. ஒருநாள் அவர் கையில் இருந்த சில சில்லறைக் காசுகளைக் குளத்தில் தூக்கி எறிந்துவிட்டு தபசில் ஆழ்ந்து போனார். ‘காசும் பணமும் நகையும் ஆட்கொல்லி’ என்று சொன்னவர், கடைசி வரையில் காசைக் கையில் தொடவே இல்லை. அவரைப் பின்பற்றி இன்னொரு யோகி வாழ்ந்தார். ‘நான் ஒரு பிச்சைக்காரன். உனக்கும் எனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சைக் கேட்கிறேன்’ என்றார். அவர் யோகி ராம் சுரத் குமார்.

ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்த ஆன்மீகவாதிகள். அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா போன்ற சாமியார்கள். அதற்கு முன், கார்ப்பிரேட் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


கார்ப்பிரேட் என்பது corporate எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்த ஒரு வாடிக்கைச் சொல். தமிழில் இது ஒரு வழக்குச் சொல்லாக மாறி வருகிறது. ஒரு நிறுவனத்தின் உச்ச மட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களைக்  கார்ப்பிரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றிச் சுற்றிதான் இருக்கும். அவர்களை மிஞ்சி எதுவும் நடக்க முடியாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவும் இல்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப் போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான்  கார்ப்பிரேட் அல்லது கார்ப்பரேட் தலைவர்கள் என்பார்கள்.


நித்தியானந்தா என்பவர் ஒரு கார்ப்பிரேட் சாமியார்தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி, ஞானி, இந்திய ஞான மரபில் வந்தவர் என்று சொல்லிக் கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற ஆன்மீகக் கர்த்தாக்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி இலட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்தார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வையும் மேற்கொண்டனர்.
சான்று: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1206/12/1120612015_1.htm
ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் ‘எனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம். எனக்கு நித்திதான் வேண்டும்’ என்று சொல்லி  அந்தப் பெண், நித்யானந்த ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்தாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது ‘போகட்டும்’ என்று சொன்னார் நித்யானந்தர். புத்தர் துறவியாக மாறவில்லையா என்று திருப்பிக் கேட்டாராம். சான்று: http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=77945


இந்தக் கட்டத்தில் எனக்குள் ஒரு கேள்வி. அந்தத் தெய்வ மகான் தன்னுடைய 29ஆவது வயதில் யசோதராவை  விட்டு விலகிச் சென்றார். லௌகிக வாழ்க்கையை மறுத்து துறவறம் பூண்டார். ஆனால், நித்யானந்தர் என்ன செய்தார். தன்னுடைய 32ஆவது வயதில் ரஞ்சிதாவை இல்லறத்தில் இணைத்துக் கொண்டார். துறவறத்தைத் துறந்து லௌகித்தில் லயித்துப் போனார்.
சான்று: http://www.manithan.com/news/20120517102697
நித்யானந்தரின் பக்த கோடிகள் எல்லாருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல அவர் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சுயமான சிந்தனை என்பதே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைத்தான் இவர்களும் கண்களை மூடிக் கொண்டு நம்புகிறார்கள், செய்கிறார்கள்’ என்று ஒரு தமிழகத் தாளிகை குற்றம் சொல்கிறது. ஆனால், அதே தாளிகைதான் “ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” எனும் தொடரை இரண்டு வருடங்களுக்கு கடுகு தாளிப்பு செய்தது. அதை உலக மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் துணுக்குகளைப் பாருங்கள்.


“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா அவன் மேல விழுற முதல் விளக்குமாறு நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”
சான்று: http://www.envazhi.com/நித்யானந்தா-மீது-அப்படிய/
“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியாரை பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…” என்று அந்தத் தாளிகையே நக்கல் செய்கிறது. வாழ்ந்தால் ஒரு பேச்சு. தாழ்ந்தால் ஒரு பேச்சு. நல்ல ஒரு ஜால்ரா.


உலகில் இரண்டு வகை சாமியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஒன்று பிடிபட்ட சாமியார். இன்னொன்று பிடிபடாத சாமியார். இதில் எந்தச் சாமியார் மரண அடி இல்லாமல் தப்பிக்கின்றாரோ, அந்தப் பக்கமாகச் சாய்வதற்கு ஒரு செம்மறியாட்டுக் கூட்டமே காத்து இருக்கும். இப்படி நான் சொல்லவில்லை. அமிழ்தா எனும் வலைப்பதிவில்  ’பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை’ எனும் கட்டுரையில் எழுதப்பட்டு இருக்கிறது.
சான்று: http://amizhtha.wordpress.com/2010/03/10/பிரேமானந்தா-முதல்-நித்யா/.
ஒரு காலத்தில் வயிற்றுக்குக் கிடைத்தால் போதும் என்று சாமியார்கள் சிலர் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தார்கள். எதற்கும் அதிகமாக ஆசைப்படவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எல்லா சாமியார்களையும் குறை சொல்லவில்லை. இப்போதைக்கு மாட்டிக் கொண்டு இருப்பது கார்ப்பரேட் சாமியார்கள்தான். கார்ப்பரேட் அல்லாத சாமியார்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சரி.

இப்போது நடப்பது என்ன. கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஆடம்பரமான விளம்பரங்கள். அவர்கள் நடக்கின்ற பாதையில் எல்லாம் பூமாலைகள். உடுத்துகின்ற காவி உடைகளில் எல்லாம் முழுக்க முழுக்க பன்னீர்ப் புஷ்பங்கள். சந்தனச் சவ்வாதுகள்.
காலையில் இந்தியா. மாலையில் மாலைத்தீவு. ராத்திரியில் அரபுகடல் அபிஷேகம். அவர்களின் கஜானாக்கள் கோடிக் கோடிகளில் நிறைகின்றன. தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்துப் பூஜிக்கச் சொல்கிறார்கள். சாமிகள் செய்ய முடியாததைச் சாமியார்கள் செய்ய முடியும் என்று பகதர்களையும் நம்ப வைக்கின்றனர். அது பெரிய பாவம். இப்போது தெரியாது.
யாரோ ஒருவருக்கு எப்போதோ ஒரு நல்லது நடந்து இருக்கும். அதை அவர் அடுத்தவரிடம் சொல்ல, அடுத்தவர் அதை மற்றவரிடம் சொல்ல, அது அப்படியே பரந்து விரிந்து பாய்மரக் கப்பலில் பயணம் செய்கிறது. இதை ஒரு Domino Effect என்றும் சொல்லலாம்.
சான்று: http://gilmaganesh.blogspot.com/2010/03/blog-post_3243.html
கடவுளை மிஞ்சி எதுவும் இல்லை. அவர் செய்யாததை எந்தச் சாமியாராலும் செய்ய முடியாது. ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” என்று தொடர் எழுதிய ஓர் ஆன்மீகவாதி, ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று தன்னுடைய ரஞ்சித பாசத்தால் நிரூபித்து இருக்கிறார். அவருடைய எழுத்துகளுக்கும், செயலுக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
கார்ப்பிரேட் சாமியார்களின் தோற்றம் இருக்கிறதே அது ஒரு மாயை. அதற்கு அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கும் அற்புதமான விளம்பர ஜோடனைதான் அதற்கு மூலகாரணம். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதிகார மையங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், ஆன்மீக வகுப்புகள் எல்லாம் கலந்த ஒரு கூட்டாஞ்சோறுதான் இன்றைய கார்ப்பிரேட் சாமியார்கள்.
சான்று: http://everyonelovesvj.blogspot.com/2010_03_13_archive.html
இந்தக் கார்ப்பிரேட் சாமியார்களின் குரு யார் தெரியுமா? அவர்தான் தீரேந்திர பிரம்மச்சாரி. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது தீரேந்திரரின் பயணம் தொடங்கியது. இந்திராகாந்திக்கு ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம் ஆகிய இருவரும் பக்கா எதிரிகள். இருந்தாலும் பிரம்மச்சாரியார் இரு தரப்பினருக்கும் நண்பர்களாக இருந்தார். தனக்கு வேண்டியதைச் சாணக்கியமாகச் சாதித்துக் கொண்டார். அந்தக் காலக் கட்டத்தில்தான் கார்ப்பிரேட் சாமியார்களின் மன்மத மந்திரங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது.
அதன் பின்னர் சந்திராசாமி வந்தார். இப்போது பெயர் போட்டுக் கொண்டு இருக்கும் கார்ப்பிரேட் சாமியார்களுக்கு அந்தச் சந்திராசாமிதான் நல்ல ஒரு ரோல் மோடல். இவர் நரசிம்ம ராவ், சந்திரசேகர் காலங்களில் கோடிக் கோடியாகப் பணம் சம்பாதித்தார். அடுத்து வந்த இந்திய அரசு இவர் மீது வழக்கு போட்டது. அவர் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவாறு அவரின் கடப்பிதழையும் முடக்கி வைத்தது. அது ஒரு பெரிய கதை. அப்புறம் ரஜ்னீஷ் வந்தார்.

இவர்  கொஞ்சம் வித்தியாசமானவர். சுதந்திரமான போக்கு கொண்டவர். இவரைச் ’செக்ஸ் குரு’ என்றும் சொல்வார்கள். இவர் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்.’

என்ன அபிரிதமான கண்டுபிடிப்பு. நோபல் பரிசு கொடுத்து இருக்கலாம். யாரும் சிபாரிசு செய்யவில்லை. இவர் அமெரிக்காவில் பெரிய பெரிய ஆசிரமங்களைக் கட்டினார். அவற்றை அமெரிக்க அரசு பறிமுதல் செயதது. அதுவும் ஒரு பெரிய நீண்ட கதை.
இந்தக் கட்டத்தில்தான் சாய்பாபா வந்தார். வெறும் கையில் விபூதி வரவழைப்பது. மோதிரத்தை வரவழைத்து பரிசாகக் கொடுப்பது. பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுப்பது. இவை அனைத்தும் சித்து வேலைகள் என்று லண்டன் பி.பி.சி.யும் நார்வே நாட்டு என்.ஆர்.கே. தொலைக்காட்சி நிலையமும் பிரபலப்படுத்தின. Seduced By Sai Baba எனும் நாடகம் சாய்பாபாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.  
சான்று: http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba#Criticism_and_controversy
தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும், அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார் பிரேமானந்தா. பாலியல் குற்றம், வெளிநாடுகளில் சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்துச் சிறையில் தள்ளியது. 14 ஆண்டுகள் சிரையில் இருந்தார்.

சென்ற ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சிறையிலேயே இறந்தும் போனார்.  ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகின்றன. கல்கி எனும் சாமியார் மீதும் ஏராளமான புகார்கள் இருக்கின்றன.
சான்று: http://ta.wikipedia.org/wiki/பிரேமானந்தா
ஆக, ரஜ்னீஷின் மெகா ஆசிரமங்கள், சந்திராசாமியின் அரசியல் அதிகாரப் பிடிகள், அடுத்து சாய்பாபாவின் சமூக நலச் சேவைகள். இந்த மூன்றையும் ஒன்றாகக் கூட்டிப் பாருங்கள். அதில் ஒரு கலவை வரும். அந்தக் கலவையில்தான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் வந்து நிற்கிறார்கள்.
சில கார்ப்பரேட் சாமியார்கள் அரசியல் தரகர்களாகவும் இருக்கிறார்கள்.

சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். சிலர் கருப்புப் பண வங்கிகளாக இருக்கிறார்கள். சிலர் போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சான்று: திகுதிகு திகம்பர சாமிகள். ப.திருமாவேலன். 17.03.2010 ஆனந்த விகடன்.
படு மோசமான தொழில்களைக் காவி உடையில் கார்ப்பரேட் செய்கிறார்கள். முதலீடு இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக ஒரு சமயம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நம்பும்படி  பல்வேறு மாஜிக் மாய்மாலங்களைச் செய்து வருகிறார்கள். கோடிக் கோடிகளாகக் குவிக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,
தேவநாதன் எனும் சாமியாரின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இருபது ஆண்டு கால வரலாறுகள் உள்ளன. இருந்தும் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் சர்வலோக குருவாக வலம் வர முடிகிறது?
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” கார்ப்பரேட் சாமியார்கள் பெரிய பெரிய தத்துவங்களைப் பற்றி மேடையில் பேசலாம். ஆனால், கடைசியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சிற்றின்பப் பிரியர்களாக இருக்கலாம். அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் அவர்களை ஆண்டவனாகப் பார்ப்பது பேதைமையிலும் பேதமை ஆகும்.
ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய ஆசையும்கூட!

சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.                                                                                  Thanks to; ksmuthukrishnan blogspot.in

சனி, 19 ஏப்ரல், 2014

புண்ணியவான்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே .
நம்முடைய கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.

அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.

5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.

மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் ,
ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.

இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

விவரங்களுக்குhttp://www.shanthisocialservices.org/index.html 

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

என்ன மஹாத்மா காந்திய சுட்டுட்டாங்களா?


இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய
ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். 


(கோட்சே காந்தியை கொள்வதற்கு முன் தன் கையில் இஸ்லாமிய பெயராகிய இஸ்மாயில் என்று பச்சை  குத்தி இருந்தான் இதன் மூலம் மத சண்டை மூண்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் அளிக்க படுவார்கள் என்று அவன் போட்ட திட்டம் 
அவன் பிடி பட்டதால் பலிக்கவில்லை






     கோட்சே: வயது 37. முழுப்பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. இவனுடைய தந்தை, தபால் துறையில் மாதம் 15 ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர். 


கோட்சேக்கு மூன்று சகோதரர்கள்; இரண்டு சகோதரிகள். தென் மராட்டியத்தில் உள்ள சாங்லி என்ற இடத்தில் கோட்சே பிறந்தான் புனாவில் படித்த கோட்சே, பத்தாம் வகுப்பைக்கூட பூர்த்தி செய்யவில்லை. படிப்பில் நாட்டம் இல்லாமல் துறைமுகத்தில் வேலை பார்த்தான். பின்னர் பழ வியாபாரம், கார் டயர்களை பழுதுபார்த்தல்... இப்படி பல வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியில் தையல் வேலை கற்றுக்கொண்டு தையல் கடை வைத்தான். 


 படிப்பு அதிகம் இல்லையென்றாலும், ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும், பேசவும் தெரியும். கார் ஓட்டுவதிலும் சூரன். 


1937_ம் ஆண்டில்  சவர்க்கார் தொடங்கிய இந்து மகா சபையில் சேர்ந்தான். சிறு வயதில், ரத்தத்தை கண்டாலே கோட்சேக்கு "அலர்ஜி" என்றால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை. 1947 ஜுலை முதல், "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வந்தான்.


2,ஆப்தே: வயது 34. ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆப்தே, "பி.எஸ்.சி" பட்டதாரி. பிறகு 1941, 42_ல் ஆசிரியர் வேலைக்கு ("பி.டி") படித்துத்தேறினான்.


1943_ல், இந்திய விமானப்படையில் 4 மாதம் பணியாற்றினான். தம்பி இறந்து போனதால், குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகி, சொந்த ஊர் திரும்பினான். அகமது நகர் பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகவும் பணிபுரிந்தான். 1934_ல் கோட்சேயுடன் பழக்கம் ஏற்பட்டது.


புனாவில், துப்பாக்கி பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, இந்து இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தான், ஆப்தே. பின்னர் கோட்சேயுடன் சேர்ந்து, 1944_ல் "தி அக்ரானி" என்ற பத்திரிகையைத் தொடங்கினான். அந்தப் பத்திரிகையை வெள்ளையர் அரசாங்கம் தடை செய்தது. பின்னர் 13.7.1947_ல், இருவரும் சேர்ந்து "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற பத்திரிகையைத் தொடங்கினர். இதன் ஆசிரியர் கோட்சே; நிர்வாகி ஆப்தே. இதில், மகாத்மா காந்தியை கடுமையாகத் தாக்கியும், பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதி வந்தனர்.


ஆப்தே, எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் உடையவன். ஆங்கிலம் பிரமாதமாகப் பேசுவான். பெண் சினேகிதிகள் ஏராளம். இவனுடைய முதல் குழந்தை ஊனமாகப் பிறந்தது. அதனால் மனைவி மீது ஆசை போய்விட்டது. பிற பெண்களின் மீது மோகம் அதிகரித்தது. ஓட்டல்களில் பணிபுரியும் பெண்கள், விமானப் பணிப்பெண்கள், காபரே நடனம் ஆடும் பெண்கள் இப்படி பலரகப்பட்ட பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். இந்தப் பெண் ஆசையால்தான், காந்தி கொலையில் இவன் போலீசாரிடம் சிக்க நேர்ந்தது, கைரேகை, ஜோசியம் என்றால் ஆப்தேக்கு ஒரே பைத்தியம். அவனுக்கும் ஜோதிடம் பார்க்கத் தெரியும். விலை உயர்ந்த மேல் நாட்டு மது, மராட்டியரின் இனிப்பு வகைகள், நல்ல உடல் கட்டு உடைய பெண்கள் என்றால் ஆப்தேக்கு ரொம்பவும் பிடிக்கும்.

                    3வீரசவர்க்கார் 1883 மே 28_ந்தேதி பிறந்தவர். லண்டனில் சட்டம் (பார்_அட்_லா) படிக்கச் சென்றவர். சுதந்திரப் போராட்ட தீவிரவாதி. லண்டனில் ஒரு வெள்ளைக்கார அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி, கடலில் குதித்து நீந்தி, பிரான்சுக்குப்போனார். பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டார். 10 ஆண்டு காலம் சிறையில் கழித்தார். விடுதலை அடைந்த பிறகு, "இந்து மகா சபை"யைத் தொடங்கினார். இந்து _ முஸ்லிம் ஒற்றுமை எக்காலத்திலும் ஏற்படாது என்று கருதினார். காந்தியின் அகிம்சை கொள்கையை எதிர்த்தார். கோட்சேயும், ஆப்தேயும் இவருடைய சீடர்கள். லண்டனில் இருந்தபோது, காந்தியை சவர்க்கார் சந்தித்துப் பேசி இருக்கிறார்.பின்னர் சவர்க்காரின் சொந்த ஊருக்கு காந்தி சென்றிருந்தபோதும், இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.


     4நாதுராம் விநாயக் கோட்சேயின் தம்பி. வயது 29. மெட்ரிகுலேஷன் தேறியவன். புனாவில் உள்ள ராணுவ தளவாடக் கிடங்கின் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி வந்தான். இந்து மகா சபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட விரும்பினான்.
     5விஷ்ணு கார்கரே: வயது 34. இளமையிலேயே வறுமையை அனுபவித்தவன். அனாதை விடுதியில் வளர்ந்து ஓட்டலிலும், நாடகக் கொட்டகையிலும் வேலை பார்த்தவன். சில சமயம் பழ வியாபாரம் செய்திருக்கிறான். பிறகு சிறிய ஓட்டல் ஆரம்பித்தான். ஆப்தேயின் நட்பு கிடைத்தது. அவன் உதவியுடன் தன் உணவு விடுதியை விரிவுபடுத்தி, "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" என்ற பெயரில் ஓட்டல் நடத்த ஆரம்பித்தான்.இந்து மகாசபையின் ஒரு பிரிவான "ஆர்.எஸ்.எஸ்" அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. "இந்து மகாசபை"யின் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டான்.


 6 மதன்லால் பாவா (வயது 20). காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவன். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ஓடிவந்தான், இவன் தந்தையை பாகிஸ்தானியர் தாக்கியதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் முஸ்லிம்களை மதன்லால் வெறுத்தான். இவனுக்கும், "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" விடுதியை நடத்தி வந்த விஷ்ணு கார்கரேக்கும் அறிமுகம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் மீதான பகை இருவரையும் நண்பர்களாக்கியது.


   6திகம்பர ராமச்சந்திர பாட்ஜே: வயது 37. மராட்டியத்தில் சாலீங்கான் நகரத்தைச் சேர்ந்தவன். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, புனா நகரசபையில் சின்ன வேலையில் சேர்ந்தான். வருமானம் போதவில்லை என்று சொந்தத் தொழில் செய்ய விரும்பினான். இவனது தந்தை, "பாதுகாப்பு கவசம்" செய்வதில் நிபுணர். தந்தையிடம் அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, பிறகு கத்தி, நாட்டு வெடிகுண்டு, கையெறி குண்டு முதலியவற்றைத் தயாரிக்கலானான். இதன் மூலம், முஸ்லிம்களுக்கு எதிராகப்போராடும் இந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பல பயங்கர ஆயுதங்கள் தயாரித்து இந்து தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தான். சற்று குள்ளமான பாட்ஜே, எப்போதும் காவி உடை அணிந்து, நீண்ட தலை முடியுடன் சாமியார் போல காட்சி அளிப்பான். ஆயுதம் தயாரிப்பதுடன், ஆயுதங்களை கடத்தி விற்பதும் இவனது முக்கியத்தொழில். சங்கர் கிஸ்தியா. பாட்ஜேயின் வேலைக்காரன். ஒரு சாதாரண தச்சுத்தொழிலாளியின் மகன். முரட்டு ஆசாமி. பாட்ஜேயின் உத்தரவுப்படி, ஆயுதங்களை ரக சியமாகக் கடத்திச்சென்று, தீவிரவாதிகளிடம் கொடுப்பது, இவனுடைய முக்கிய வேலை. பாட்ஜேயின் ஆயுதப்பட்டறையில் கத்திக்கு சாணை பிடிப்பது, துப்பாக்கிகளுக்கு தேவையான குண்டுகளைத் தயாரிப்பது போன்ற வேலைகளிலும் வல்லவன்.


            7சதாசிவபார்ச்சூர்: வயது 47. குவாலியர் நகரில் டாக்டராக பணி புரிந்தவர். கோட்சேக்கு துப்பாக்கி கொடுத்து உதவினார்


கொலைத்திட்டம்,
    .சாமியார் வேடத்தில் ஆயுத வியாபாரம் செய்து வந்த திகம்பர் பாட்ஜேயை 1948 ஜனவரி 10ந்தேதி ஆப்தேயும், கோட்சேயும் சந்தித்தனர். "ஒரு முக்கியமான காரியத்துக்காக துப்பாக்கியும், வெடிகுண்டுகளும், கையெறி குண்டுகளும் தேவைப்படுகின்றன. அதற்குரிய தொகையை உடனடியாக ரொக்கமாகக் கொடுக்கத் தயார்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான். ஆப்தேயும், கோட்சேயும் இந்து தீவிரவாதிகள் என்பது சாமியார் பாட்ஜேக்குத் தெரியும்.


முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதங்களைக் கேட்கிறார்கள் என்று நினைத்தானே தவிர காந்தியைக் கொல்வதற்காக என்பதை அறியவில்லை. பாட்ஜேயிடம் அப்போது துப்பாக்கி இல்லை. என்றாலும் பணம் வரக்கூடிய ஒரு நல்ல வியாபாரத்தை இழந்துவிட அவன் விரும்பவில்லை. "ஜனவரி 14ந்தேதி பம்பாயில் என்னை சந்தியுங்கள். நீங்கள் கேட்கும் எல்லா ஆயுதங்களையும் தருகிறேன்" என்றான். "அப்படியானால் பம்பாயில் இந்து மகாசபை அலுவலகத்தில் சந்திப்போம்" என்று பதிலளித்தான், ஆப்தே. காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் தானும் உயிர் இழக்கப்போவது உறுதி என்பதை கோட்சே உணர்ந்திருந்தான். அவன் ஏற்கனவே ரூ.3 ஆயிரத்துக்கும், ரூ.2 ஆயிரத்துக்கும் இரண்டு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தான்.


 ஜனவரி 13ந்தேதி மாலை கோட்சேயும் ஆப்தேயும் புனாவில் இருந்து பம்பாய்க்கு புறப்பட்டார்கள். மறுநாள் மாலை பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு 7.30 மணிக்கு அவர்கள் இந்து மகாசபைத் தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பிறகு இந்து மகாசபை அலுவலகத்திற்குச் சென்றார்கள். அங்கு இவர்களை சாமியார் பாட்ஜே சந்தித்தான். துப்பாக்கியைத் தவிர மற்ற எல்லா ஆயுதங்களையும் கொடுத்தான். "எப்படியும் ஒரு நாட்டுத்துப்பாக்கியையாவது வாங்கித் தருகிறேன்" என்று உறுதியளித்தான். "நீ கொடுத்துள்ள ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்கோ, கோட்சேக்கோ தெரியாது. எனவே பயிற்சியளிக்க எங்களுடன் நீயும் டெல்லிக்கு வா. கூடுதலாகப் பணம் தருகிறேன்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான்.


சாமியார் பாட்ஜேக்கு பணத்தின் மீது ஆசை அதிகம். எனவே டெல்லிக்கு வர சம்மதம் தெரிவித்தான். ஆப்தேயும், கோட்சையும் காந்தியைக் கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. இதன்பின் பம்பாயில் புகழ் பெற்ற "சீ கிரீன் ஓட்டல்" என்ற ஓட்டலில் கோட்சேயும், ஆப்தேயும் தங்கினார்கள். பாட்ஜே, கார்கரே, மதன்லால் ஆகியோரை இந்துமகாசபை அலுவலகத்தில் தங்க வைத்தார்கள். கோட்சே அசதியில் தூங்கிவிட்டான். ஆப்தே தன் பெண் சிநேகிதிக்கு போன் செய்தான். அவள் டாக்டர் ஒருவரின் மகள். "நாளை நான் டெல்லிக்கு போகிறேன். இன்று உன்னை சந்திக்க விரும்புகிறேன்" என்று டெலிபோனில் கூற அவள் சம்மதம் தெரிவித்தாள். கோட்சே தூங்கிவிட்டதால் அவனுக்குத் தெரியாமல் ஆப்தே அங்கிருந்து வெளியேறி தன் காதலியைச் சந்தித்தான். அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினான். பொழுது விடிந்தது.


கோட்சேயும், ஆப்தேயும் இந்துமகாசபை அலுவலகத்துக்குச் சென்று தங்களுடைய நண்பர்களைச் சந்தித்தனர். கோட்சேயும், ஆப்தேயும் டெல்லிக்கு விமானத்தில் செல்வது என்றும் மற்றவர்கள் வெவ்வேறு ரெயில்களில் டெல்லிக்கு செல்வது என்றும் டெல்லியில் இந்து மகாசபை அலுவலகத்தில் ("சவர்க்கார் சதன்") அனைவரும் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவாயிற்று.

இதற்கிடையே பாட்ஜே ஏற்கனவே உறுதியளித்தவாறு நாட்டுத்துப்பாக்கி ஒன்றை கொண்டுவந்து கொடுத்தான். எனினும் அது கோட்சேக்கு திருப்தி இல்லை. தம்பி கோபால் கோட்சேயிடம் ரூ.200 கொடுத்து நல்ல துப்பாக்கி ஒன்றை வாங்கி வருமாறு கூறினான். பிறகு கோட்சேயும், ஆப்தேயும் பம்பாய் "ஏர் இந்தியா" விமானப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, டி.என்.கார்மார்க்கர், எஸ்.மராத்தே என்ற போலிப் பெயர்களில் இரண்டு டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.


பின்னர் ஒரு ஜவுளி மில்லுக்குச் சென்று நன்கொடையாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். திட்டமிட்டபடி 17ந்தேதி பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லிக்குப் போய்ச்சேர்ந்த கோட்சேயும், ஆப்தேயும், கனாட் சர்க்கஸ் என்ற பரபரப்பான பகுதியில் இருந்த "மரினா" என்ற ஓட்டலில் தங்கினார்கள்.


உண்மைப் பெயர்களை கூறாமல், எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ்பாண்டே என்ற பெயர்களில் அறை எடுத்தார்கள். மதன்லால், கார்கரே ஆகியோர் முன்பு பேசியபடி ரெயில் மூலம் டெல்லிக்குச் சென்றனர். "இந்து மகாசபை" அலுவலகத்தில் இடம் கிடைக்காததால், சாந்தினிசவுக் என்ற இடத்தில் உள்ள ஷெரீப் ஓட்டலில் அறை எடுத்தனர்.


கார்கரே தன் பெயரை "பி.எக்ஸ்.பியாஸ்" என்று குறிப்பிட்டான். ஆனால் மதன்லால், தன் உண்மைப் பெயரையே கூறினான். (உண்மைப்பெயரில் அறை எடுத்ததால், காந்தி கொலை வழக்கில் இவன் சுலபமாக சிக்க நேரிட்டது). அண்ணன் கொடுத்த ரூ.200 ஐக்கொண்டு ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி போய்ச்சேர்ந்தான். போலி சாமியார் பாட்ஜேயும், தன் வேலையாள் சங்கர் கிஸ்தயாவுடன் வேறு ரெயிலில் 19_ந்தேதி டெல்லியை அடைந்தான். மறுநாள் ஆப்தேயை கார்கரே சந்தித்தான்.


இந்து மகாசபாவில் தனக்கு அறை கிடைக்கவில்லை என்றும் வேறு இடத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தான். ஆப்தே ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி "இதை இந்து மகாசபை செயலாளரிடம் கொண்டு போய் கொடு. ரூம் கிடைக்கும்" என்றான். அதன்படியே அங்கு சென்று துண்டுச்சீட்டைக் காட்டியதும் அறை கிடைத்தது. கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி வந்து சேர்ந்து தன் அண்ணனை சந்தித்தான். அன்று மாலை பிர்லா மாளிக்கைக்கு சென்ற கோபால் கோட்சே, பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியை முதன் முதலாகப் பார்த்தான்.


நிறைய போலீசார் சாதாரண உடை அணிந்து ("மப்டி"யில்) கூட்டத்தோடு கலந்திருப்பதையும் கவனித்தான். காந்தியை சுட்டுவிட்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் செல்வது கடினம் என்று அவனுக்குத் தோன்றியது. பின்னர் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் மரினா ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். கொலைத்திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.


நீண்ட ஆலோசனைக்குப்பின் "1948 ஜனவரி 20_ந்தேதி மாலை 5 மணிக்கு பிர்லா மாளிகையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொல்லவேண்டும்" என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது சாமியார் பாட்ஜே அந்த அறையில் இல்லை. வேறொரு அறையில் இருந்தான். அவனை ஆப்தே அழைத்து, "வெடிகுண்டை எப்படி வெடிக்கச்செய்வது?" என்பதை விளக்கிக் காட்டும்படி கேட்டுக்கொண்டான்.ஏதோ வன்முறை ஆர்ப்பாட்டத்துக்குத்தான் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊகித்த பாட்ஜே, வெடிகுண்டை இயக்குவது பற்றி விளக்கினான். மறுநாள் காலை பாட்ஜே, சங்கர் கிஸ்தயா ஆகியோருடன் ஆப்தே பிர்லா மாளிகைக்கு சென்றான். எந்த இடத்தில் இருந்து காந்தியை நோக்கி குண்டு வீசலாம், எங்கிருந்து துப்பாக்கியால் சுடலாம் என்று ஆராய்ந்தான். "பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடலில் சோதனையிடக்கூடாது" என்று காந்தி கண்டிப்பாக கூறியிருந்தார்.


இதன் காரணமாக கூட்டத்துக்கு வருகிறவர்களை சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க வேண்டுமே தவிர, யாரையும் சோதனைபோடவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் உத்தரவிட்டிருந்தார். இதை அறிந்த ஆப்தே மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் இவர்களுடன் கோட்சே, கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால் ஆகியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். இந்து மகாசபையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.

பாட்ஜேயின் நாட்டுத்துப்பாக்கியும், கோபால் கோட்சேயின் கைத்துப்பாக்கியும் சரியாக இயங்குகின்றனவா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. துப்பாக்கிகள் இலக்கை சரியாகப் போய்த் தாக்கக்கூடிய வேகத்துடன் இல்லை என்று கோட்சே கருதினான். "என் துப்பாக்கி நீண்ட காலம் பயன்படுத்தப்படாததால் துரு பிடித்திருக்கிறது. கொஞ்சம் எண்ணையும், ஒரு சிறு கம்பியும் இருந்தால் சரி செய்துவிடலாம்" என்றான் கோபால் கோட்சே. மதன்லால் போய் அந்த இரண்டு பொருள்களையும் வாங்கி வந்தான். அதைக்கொண்டு துப்பாக்கியை சரி செய்தான் கோபால் கோட்சே. இவர்கள் அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது, மெகர்சிங் என்ற காட்டிலாகா அதிகாரி அங்கு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். "ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் உங்களுக்கு என்ன வேலை?" என்று கேட்டார் அந்த அதிகாரி. "நாங்கள் டெல்லியைச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்" என்றான், ஆப்தே. மதன்லால் பஞ்சாபி மொழியில் பேசி, மெகர்சிங்கை நம்பும்படி செய்தான். (இந்த மெகர்சிங் பிறகு காந்தி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக வந்து கொலையாளிகளை அடையாளம் காட்டினார்.)


மரினா ஓட்டலுக்குத் திரும்பிய இவர்கள் அன்று மாலை காந்தியை கொலை செய்யும் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். அந்தத் திட்டம் வருமாறு:


ஒரே சமயத்தில் காந்தி மீது பலமுனைத் தாக்குதல் நடத்தவேண்டும். சாதகமான நேரம் வந்ததும், கோட்சே தன் கன்னத்தைச் சொறிவது போல, ஆப்தேக்கு "சிக்னல்" கொடுக்கவேண்டும். உடனே ஆப்தே தன் கைகளை உயர்த்தி, மாளிகையின் பின்புறம் சுவர் அருகே வெடிகுண்டுகளுடன் காத்திருக்கும் மதன்லாலுக்கு சைகை காட்ட வேண்டும். உடனே மதன்லால் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய வேண்டும்.


வெடிச்சத்தத்தைக் கேட்டதும் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். உடனே கார்க்கரே காந்தி மீது கையெறி குண்டை வீசவேண்டும். அதே சமயம் பிரார்த்தனை மண்டபத்தின் பின் சுவரில் உள்ள சிறு ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கியோ, முதுகை நோக்கியோ கையெறிகுண்டை கோபால் கோட்சே வீச வேண்டும். கோபால் அருகிலிருந்து காந்தியை நோக்கி சாமியார் பாட்ஜே துப்பாக்கியால் சுடவேண்டும். சங்கர் கிஸ்தியா கூட்டத்தில் இருந்துகொண்டு காந்தி மீது எறிகுண்டை வீசுவதுடன் துப்பாக்கியாலும் சுடவேண்டும்." மேற்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டு யாராவது போலீசில் பிடிபட்டால் எப்படிப்பட்ட சித்ரவதை செய்தாலும் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விசுவாசமாக நடந்து கொள்ளவேண்டும் என்று இந்து மதத்தின் பெயரால் அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள். பின்னர் பிர்லா மாளிகைக்குப் புறப்படத் தயாரானார்கள்,


காந்தியை கொல்ல முதல் முயற்சி,,,,
                  காந்திஜியின் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும்போது தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்று கோட்சேயும், மற்றவர்களும் நினைத்தனர். கோட்சே, மராத்திய பாணியில் உடை அணிந்து கொண்டான். ஆப்தே வேட்டி சட்டையிலும், மதன்லால் மேற்கத்திய உடையிலும் இருந்தனர். கார்கரே நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு பிராமணர் போலத்தோன்றினான். ஒவ்வொருவருக்கும் புதிய புனை பெயர்கள் சூட்டப்பட்டதுடன், அவரவர்களுக்கு உரிய ஆயுதங்களும் தரப்பட்டன. கோட்சே, மதன்லால், கார்கரே ஆகியோர் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளில் ("டோங்கா") தனித்தனியே புறப்பட்டனர். ஆப்தேயும், மற்றவர்களும் ஒரு காரில் சென்றனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, கோபால் கோட்சேயும், சாமியார் பாட்ஜேயும் பிர்லா மாளிகையின் பின்புறமுள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக உள்ளே நுழைய வேண்டும். அவர்களை அங்கு கொண்டு போய் விடுவதற்காக ஆப்தேயும், கார்கரேயும் உடன் சென்றனர். 




வழியில் பிர்லா மாளிகையின் ஊழியர் (கார் கழுவும் சிப்பந்தி) சோதிராம் என்பவர் அவர்களை வழிமறித்து, "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார். "காந்தி பிரார்த்தனை கூட்டத்தில் பேசும்போது பின்பக்கம் இருந்து அவரை போட்டோ எடுக்கப் போகிறோம்" என்று கார்கரே பதில் அளித்தான். "எங்கே கேமராவை காட்டுங்கள்" என்று சோதிராம் கேட்க, உடனே ஆப்தே, வெடிப்பொருள்கள் அடங்கிய பெட்டியை காண்பித்து, "இதற்குள்தான் கேமரா இருக்கிறது" என்றான்.


சோதிராம் தயங்கவே, கார்கரே இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதிராமின் கையில் அழுத்தினான். உடனே அவர்களுக்கு வழிவிட்டான் சோதிராம். சாமியார் பாட்ஜே, கோபால் கோட்சே இருவரையும் ஜன்னல் அருகே விட்டு விட்டு, ஆப்தே திரும்ப முயன்றபோது, "கொஞ்சம் நில்லுங்கள்" என்று கூறினான், பாட்ஜே. அவன் குரலில் கோபம் தொனித்தது. "நான் உங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தேன். அவற்றை இயக்கிக் காட்டவே வந்தேன். மகாத்மா காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் நான் சேரமாட்டேன்" என்று கூறிய பாட்ஜே,"நான் மத வெறியன் அல்ல.
ஆயுதங்களை விற்பவன் என்றாலும் என் கையால் யாரையும் சாகடிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு தரையில் உட்கார்ந்து விட்டான். பாட்ஜே இப்படி கடைசி நேரத்தில் பின்வாங்குவான் என்று ஆப்தே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனவே அப்படியே திகைத்துப்போய் நின்றான். "காந்தியை கொலை செய்யப்போவதாக முன்பே நீங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த தேசத்துரோக காரியத்திற்கு நான் உடந்தையாக இருந்திருக்க மாட்டேன்" என்றான் பாட்ஜே.


நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இனி அவனுடன் விவாதித்து பயனில்லை என்று ஆப்தே உணர்ந்தான். "அப்படியானால் நீ இங்கே இருக்க வேண்டாம். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போய்விடு" என்று கூறினான். "காந்தியை சுடும் பொறுப்பை நீ நிறைவேற்று" என்று கோபால் கோட்சேயிடம் கூறிவிட்டு ஆப்தே அங்கிருந்து வெளியே விரைந்தான்.


கோபால் கோட்சே சுவரில் இருந்த ஜன்னலை நோக்கினான். அது மிக உயரத்தில் இருந்தது. தரையில் நின்று கொண்டு அதன் வழியாக யாராலும் சுடமுடியாது. ஏணி அல்லது நாற்காலி இருந்தால்தான் அதில் ஏறி காந்தியை நோக்கி சுடமுடியும். என்ன செய்வது என்று புரியாமல் கோபால் திகைத்தான். உண்ணாவிரதம் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்த காந்திஜியை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து பிரார்த்தனை நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்தார்கள்.

கூட்டம் தொடங்கியது. "காந்தி மீது பலமுனை தாக்குதல் நடத்த இதுவே நல்ல தருணம்" என்று நினைத்தான் கோட்சே. தன் கன்னத்தை சொறிந்து ஆப்தேக்கு சமிக்ஞை செய்தான். உடனே ஆப்தே தன் கையை உயர்த்தி குண்டை வெடிக்கச் செய்ய மதன்லாலுக்கு சிக்னல் கொடுத்தான். பிர்லா மாளிகையின் பின்புறச் சுவர் அருகே நின்று கொண்டிருந்த மதன்லால், தன் வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்தது. பிர்லா மாளிகையின் பின்புறச்சுவரின் ஒரு பகுதி தகர்ந்தது. இந்த சத்தத்தினால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே கார்கரே நெரிசலில் சிக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டான். அந்த இடத்தில் இருந்து காந்தி மீது அவன் கை குண்டை வீசமுடியாத நிலை ஏற்பட்டது.


ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கி சுடவேண்டிய கோபால் கோட்சேயும், ஜன்னல் உயரமாக இருந்த காரணத்தால் சுட முடியவில்லை. காந்திக்கும், அவரைச்சுற்றி இருந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதே தெரியாது. பிர்லா மாளிகைக்கு அருகே ராணுவத்தினர் எதையாவது வெடித்து ஒத்திகை பார்ப்பது வழக்கம். வெடிச்சத்தத்தைக் கேட்ட காந்தியும், மற்றவர்களும் அதை வழக்கமான ராணுவ ஒத்திகை என்றே நினைத்தனர். பிரார்த்தனைக் கூட்டம் தடங்கல் இன்றி நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே பிர்லா மாளிகைப் பூங்காவுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சுலோசனாதேவி என்ற பெண் வெடிகுண்டை மதன்லால் வெடித்ததையும், பிறகு அவன் தப்பி ஓட முயற்சிப்பதையும் பார்த்துவிட்டாள்.


"பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று கூச்சலிட்டாள். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியும், சில போலீசாரும், மற்றும் சிலரும் மதன்லாலை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டனர். அவன் திமிறிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது, சரியான அடி_உதை விழுந்தது. அதனால் அவன் சட்டை கிழிந்தது. அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிர்லா மாளிகைக்குள் இழுத்துச்சென்றனர். மதன்லால் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதை தூரத்தில் இருந்து கோட்சேயும், ஆப்தேயும் மற்றவர்களும் பார்த்தனர்.


இனி தப்பி ஓடுவதுதான் புத்தசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்து அந்த இடத்தில் இருந்து நழுவத் தொடங்கினர். கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் காரில் தப்பிச்சென்றனர். வழியில் தன் தம்பியிடம் கோட்சே சொன்னான்: "மதன்லால் மூலம் போலீசார் உன்னைப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. போலீசாரிடம் சிக்காமல் நீ எப்படியாவது புனாவுக்குச் சென்றுவிடு. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. காந்தியை நான் கவனித்துக்கொள்கிறேன். துணிந்தவனுக்கு தோல்வி என்பதே இல்லை." இப்படிக் கூறிய கோட்சே வழியில் காரை நிறுத்தி கோபாலை இறக்கிவிட்டான்.


பிறகு கோட்சேயும், ஆப்தேயும் மரினா ஓட்டலுக்குச் சென்றனர். அறையை உடனடியாக காலி செய்துவிட்டு டெல்லி ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி அருகில் உள்ள துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் சப்_இன்ஸ்பெக்டர் தசோந்தாசிங் உடனே பிர்லா மாளிகைக்கு விரைந்தார். மதன்லாலை அவர் பரிசோதித்தார். மதன்லால் தன் உடலில் இன்னொரு கையெறி குண்டை மறைத்து வைத்திருந்தான்.


அதை போலீஸ் அதிகாரி கைப்பற்றி செயல் இழக்கச் செய்தார். மதன்லாலை "விசாரிக்க வேண்டிய விதத்தில்" விசாரித்தால், உண்மையைக் கக்கிவிடுவான் என்று போலீசார் கருதினர். அதன்படி போலீஸ் காவலில் வைத்து விசாரித்தார்கள். சித்ரவதைக்குள்ளான மதன்லால் உண்மையைக் கக்கினான். போலீசாரிடம் அவன் கூறியதாவது:-


"நான் மட்டும்தான் சொன்னபடி செய்தேன். மற்றவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். எனக்கு துரோகம் செய்த அவர்களைப் பிடிக்க நான் ஒத்துழைக்கிறேன்.


என்னுடன் வந்தவர்கள் மொத்தம் 6 பேர். அவர்கள் ஓட்டல் மரினாவிலும், இந்துமகா சபை அலுவலகத்திலும் இருப்பார்கள். " இவ்வாறு மதன்லால் கூறினான். மதன்லாலுடன் ஓட்டல் மரினாவுக்கு போலீசார் விரைந்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்படியும் மதன்லால் தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவான் என்று எதிர்பார்த்த கோட்சேயும், ஆப்தேயும் சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்பே அறையை காலி செய்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது.


எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ் பாண்டே என்ற பெயர்களில் கோட்சேயும், ஆப்தேயும் ஓட்டலில் ரூம் எடுத்திருந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனையிட்டார்கள். கோட்சே "என்.வி.ஜி" என்று குறியிடப்பட்ட மூன்று உடைகளை சலவைக்குப் போட்டிருந்தான். அதற்கான ரசீது அந்த அறையில் சிக்கியது. இந்துமகா சபை பொதுச்செயலாளரின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதம் ஒன்றும் போலீசுக்குக் கிடைத்தது. அதில் காந்திக்கு எதிரான வாசகங்கள் இருந்தன.


ஓட்டல் அறையை காலி செய்த கோட்சேயும், ஆப்தேயும் டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்தனர். கோட்சேக்கு முதல் வகுப்பு டிக்கெட்டும், ஆப்தேக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கப்பட்டன. அவர்கள் இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்றபோது அதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்கள்.

மதன்லாலை போலீசார் இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அவன் தலை கறுப்புத்துணியால் மூடப்பட்டு இருந்தது. கண்களால் பார்ப்பதற்காக இரண்டு துவாரங்கள் மட்டும் இருந்தன. "நன்றாகப் பார்! உன்னுடன் வந்த கொலையாளிகள் இங்கு இருக்கிறார்களா?" என்று மதன்லாலிடம் போலீசார் கேட்பது கோட்சேக்கும், ஆப்தேக்கும் கேட்டது. இருவரும் போலீசார் கண்களில் படாமல் ரெயிலில் ஏறினார்கள். ரெயில் புறப்படும் வரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் கான்பூர் போய்ச்சேர்ந்தார்கள். அடுத்த நாள் அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 23_ந்தேதி மாலை பம்பாய் போய்ச்சேர்ந்தார்கள்.


காந்தியை கொல்ல  இரண்டாவது முயற்சி,,,,,,,,,,
  மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.


காந்தியை கொல்ல  மூன்றாவது முயற்சி,,,,,,,,,


காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் இந்து முன்னணியினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.


காந்தியை கொல்ல  நான்காவது முயற்சி,,,,,,,
ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஐந்தாவது முயற்சசி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்டார்,,,,,,,
காந்தி கொலை முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பது பற்றி அலசி ஆராய்ந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதித்தனர். "பல பேர் கூட்டமாகச் சேர்ந்து மகாத்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். அது மாபெரும் தவறு. தனி நபராக இருந்து கொலை செய்வதுதான் பலனளிக்கும்" என்றான் ஆப்தே.



 நானே தனி மனிதனாக காந்தியை சுட்டுக்கொல்கிறேன்" என்று சபதம் செய்தான் கோட்சே. "ஒருவேளை இம்முறை காந்தி உயிர் தப்பிவிட்டால் பிறகு அவரை மீண்டும் கொல்ல முயற்சி செய்யமாட்டேன்" என்றும் தெரிவித்தான்.


கோட்சேயும், ஆப்தேயும் முயற்சி செய்து எப்படியாவது ஒரு நல்ல துப்பாக்கியை வாங்க"பாங்க் சில்வர்" என்ற கம்பெனிக்கு சென்று ஹிந்து ராஷ்டிரா அமைப்புக்காக ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுக்கொண்டார்கள்.


27_ந்தேதி காலை 6.30 மணி விமானத்தில் பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். வி.விநாயக்ராவ் என்ற பெயரில் கோட்சேயும் டி.நாராயணராவ் என்ற பெயரில் ஆப்தேயும் பயணம் செய்தனர்.


 ரெயில் மூலம் குவாலியர் நகருக்கு சென்றார்கள். அங்கு இந்து தீவிரவாதியான டாக்டர் பார்ச்சூரை சந்தித்து துப்பாக்கி தேவைப்படுவதாக கூறினார்கள். இதில் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று நினைத்த டாக்டர் பார்ச்சூர், "கங்காதர் தாந்த்வாதே என்பவரை சந்தியுங்கள். அவரிடம் துப்பாக்கி கிடைக்கும்" என்றார். அதன்படி தாந்த்வாதேயை சந்தித்தனர். அவன், ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவன் மூலமாக 300 ரூபாய்க்கு கறுப்பு நிற துப்பாக்கி (பெராட்டா பிஸ்டல்) ஒன்றை வாங்கித் தந்தான்.


மகிழ்ச்சி அடைந்த கோட்சேயும், ஆப்தேயும் குவாலியரை விட்டு ரெயிலில் புறப்பட்டு, 29_ந்தேதி காலை பழைய டெல்லிக்குப் போய்ச்சேர்ந்தார்கள். ரெயில்வே நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை ஒன்றை "விநாயக் ராவ்" என்ற பெயரில் எடுத்து தங்கினார்கள். அங்கு அவர்களை கார்கரே சந்தித்தான். "துப்பாக்கி கிடைத்துவிட்டது" என்று அவனிடம் கோட்சே மகிழ்ச்சியுடன் கூறினான். "நாளை (30_ந்தேதி) காந்தியை சுடப்போகிறோம். இன்றிரவு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்" என்று கோட்சே கூறினான்.


 கார்கரே எப்போதும் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். எனவே மூவரும் சைவ சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அரிசி சோறு, தயிர், சப்பாத்தி, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டனர். பின்னர் அறைக்குத் திரும்பினர். தனக்கு மறுநாள் உள்ள பெரும் பொறுப்பை உணர்ந்திருந்த கோட்சே நன்றாக ஓய்வு எடுக்க விரும்பி படுக்கையில் போய் படுத்துக்கொண்டான். தூக்கம் வராததால் ஒரு துப்பறியும் நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ஆப்தேயும், கார்கரேயும் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சினிமாத் தியேட்டருக்குச் சென்று ஆங்கிலப்படம் பார்த்தனர். மறுநாள் காலை ரெயில்வே கேண்டினில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மூவரும் பிர்லா மாளிகைக்கு சென்றனர். பிரார்த்தனை கூட்டத்துக்கு காந்தி வரும்போது நேருக்கு நேர் நின்று அவரை சுடப்போவதாக கோட்சே தெரிவித்தான்.

காந்தியை கோட்சே சுடும்போது அவனுக்கு இடைஞ்சலாக எதுவும் நிகழாமல் தடுக்க அவனுக்கு இரு புறத்திலும் ஆப்தேயும், கார்கரேயும் பாதுகாப்பாக நிற்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்கள். துப்பாக்கியை இயக்குவது எப்படி என்று அங்கு பயிற்சி பெற்றான் கோட்சே. மொத்தம் இருந்த 20 குண்டுகளில் 13 குண்டுகளை சுட்டுப் பழகுவதற்கு செலவிட்டான். காட்டில் இருந்த மரம், அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றை ஆப்தே குறிப்பிட்டுக்காட்ட மிகச்சரியாக சுட்டான்கோட்சே. மீதி 7 குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பிக் கொண்டான். பின்னர் ரெயில் நிலைய ஓய்வு அறைக்குத் திரும்பினார்கள். காந்தியை சுடுவதற்கு பிர்லா மாளிகைக்குள் எப்படி நுழைவது என்று ஆலோசிக்கப்பட்டது.
இரண்டு வழிகள் யோசிக்கப்பட்டன. முதலாவது கோட்சே புகைப்படம் எடுப்பவர்போல கேமராவுடன் உள்ளே நுழையவேண்டும். கேமராவுக்குள் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு போகலாம். அடுத்தது முஸ்லிம் பெண் போலஉடம்பை கறுப்பு நிற பர்தா துணியால் மூடிக்கொண்டு துப்பாக்கியை மறைத்துக்கொண்டு செல்லலாம். "முஸ்லிம் பெண் போல சென்றால் யாரும் சோதனை போடமாட்டார்கள். காந்தியின் அருகே செல்ல முடியும்" என்றான் கார்கரே.


"முஸ்லிம் பெண்மணி போல பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டுபோக நான் தயாராக இல்லை. அதைவிட காந்தியை சுடாமலேயே விட்டுவிடலாம்" என்றான் கோட்சே. "பெண் வேடத்தில் காந்தியை சுட முயன்று அதில் தோல்வி அடைகிறேன் என்று வைத்துக்கொள்வோம். முஸ்லிம் பெண் வேடத்தில் என் படம் பத்திரிகைகளில் வரும். அதைவிட வேறு அவமானம் எனக்கு வேறு என்ன இருக்கமுடியும்? உலகமே என்னைப் பார்த்து சிரிக்கும்" என்று கூறினான் அவன். புகைப்படக்காரன் போல கேமராவுக்குள் துப்பாக்கியைக் கொண்டு போகும் திட்டத்தை ஆப்தே விரும்பவில்லை. "இப்போது சிறிய கேமராக்கள் வந்துவிட்டன. நிகழ்ச்சிகளுக்கு பெரிய கேமராக்களை யாரும் கொண்டு போவதில்லை. தவிர கடந்த 20_ந்தேதி புகைப்படக்காரர்கள் என்ற வேடத்தில்தான் பிர்லா மாளிகைக்குச் சென்றோம். மீண்டும் அதே தோற்றத்தில் போவது ஆபத்து" என்று கூறினான். நீண்ட ஆலோசனைகளுக்குப்பின் கடைசியாக ஆப்தே ஒரு யோசனையைச் சொன்னான்.


அப்போது, டெல்லி இளைஞர்களிடையே ராணுவ மாடல் உடை என்பது பிரபலமாக இருந்தது. முழுக்கால் சட்டையில் லூசான சட்டையை "இன்" செய்து கொள்ளவேண்டும். இடுப்புப்பகுதியில் சட்டை தொளதொளப்பாக இருக்கும். அந்தப் பகுதியில் சிறிய கைத்துப்பாக்கியை சொருகிக் கொள்ளலாம். யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆப்தே சொன்ன இந்த யோசனையை கோட்சே ஏற்றுக்கொண்டான்.
பிறகு கோட்சேயும், ஆப்தேயும் கடைக்குச்சென்று சாம்பல் நிறத்தில் ராணுவ மாடல் உடையை வாங்கிக்கொண்டு ரெயில் நிலைய ஓய்வு அறைக்கு சென்றார்கள். அந்த அறையில் தங்குவதற்கான நேரம் முடியவும் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கான ஓய்வு அறையை எடுத்து அங்கு தங்கினார்கள். மாலை 4 மணியாகியது. காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.என்ற எண்ணத்துடன் கோட்சேயும், மற்ற இருவரும் புறப்படத் தயாரானார்கள்.
1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.




காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.


"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.


பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.


"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.


யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.


எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.


இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.

சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.


போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.


அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.


டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.(கோட்சே காந்தியை கொள்வதற்கு முன் தன் கையில் இஸ்லாமிய பெயராகிய இஸ்மாயில் என்று பசை குத்தி இருந்தான் இதன் மூலம் மத சண்டை மூண்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் அளிக்க படுவார்கள் என்று அவன் போட்ட திட்டம் அவன் வுஇறுடன் பிடி பட்டதால் பலிக்கவில்லை)






மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்,,,,
கோட்சே பிடிபட்டதைத் தொடர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவிய ஆப்தேயும், கார்கரேயும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். 30_ந்தேதி இரவை டெல்லி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த அகதிகள் கூட்டத்துடன் தங்கியிருந்தார்கள். மறுநாள் (31_ந்தேதி) பிற்பகல் டெல்லியில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஆப்தே இரண்டாம் வகுப்பிலும், கார்கரே மூன்றாம் வகுப்பிலும் பிரயாணம் செய்தார்கள்.




பிப்ரவரி இரண்டாம் தேதி பம்பாய் சென்று, "சீகிரீன்" ஓட்டலில் அறையெடுத்து தங்கினார்கள். பின்னர் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க புனாவுக்கும், மற்றும் பல இடங்களுக்கும் சென்று தலைமறைவாக இருந்தார்கள். இதற்கிடையே ஜனவரி 20_ந்தேதி காந்தியடிகளைக் கொல்ல பிர்லா மாளிகையில் குண்டு வீசி போலீசில் சிக்கிய மதன்லால், கொலை சதித்திட்டம் பற்றி முக்கிய விவரங்களையெல்லாம் கூறியிருந்தான்.


காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேயிடமும் தீவிர விசாரணை நடந்தது. தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கொலைத்திட்டத்தின் "மூளை"யாக செயல்பட்டவன் ஆப்தே என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவனைப் பிடிக்க பல இடங்களில் வலை விரித்தனர். பம்பாய், புனா நகரங்களில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் யார் யார் வருகிறார்கள் என்று ரகசியமாகக் கண்காணித்தனர்.


ஓட்டல்களுக்கு வரும் டெலிபோன்களும் ஒட்டு கேட்கப்பட்டன. பிப்ரவரி 13_ந்தேதி ஆப்தேயும், கார்கரேயும் பம்பாய் சென்றனர். அங்குள்ள "அப்பல்லோ பைரக்ஸ்" என்ற ஓட்டலில் தங்கினர். இந்த சமயத்தில் ஆப்தேயின் காதலி (டாக்டரின் மகள்) அந்த ஓட்டலுக்கு போன் செய்தாள். "ஆப்தே அங்கு வந்திருக்கிறாரா? எந்த நெம்பர் அறையில் தங்கியிருக்கிறார்?" என்று கேட்டாள். ஓட்டல் வரவேற்பாளர் ஓட்டல் ரிஜிஸ்தர் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்துவிட்டு, ஆப்தேயின் ரூம் நெம்பரை சொன்னார். "நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வந்து அவரை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு டெலிபோனை வைத்துவிட்டாள் அந்தப்பெண்.


ஓட்டல் வரவேற்பாளர் இன்டர்காம் மூலம் ஆப்தேயுடன் தொடர்பு கொண்டு, "டாக்டரின் மகள் டெலிபோனில் பேசினார். இன்னும் அரை மணி நேரத்தில் ஓட்டலுக்கு வந்து உங்களைச் சந்திப்பதாகச் சொன்னார்" என்று தகவல் தெரிவித்தார். போலீசுக்கு பயந்து கவலையுடன் தலைமறைவாகத் திரிந்தாலும், தன் காதலி தன்னைச் சந்திக்க இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறாள் என்ற தகவல், ஆப்தேயின் மனதில் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது. அவள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.


ஓட்டலுக்கு அவன் காதலி போன் செய்து பேசியபோது, போலீசார் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத் தெரியாது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அறைக்கதவு "டொக், டொக்" என்று தட்டப்படும் ஓசை கேட்டது. "காதலி வந்துவிட்டாள்" என்ற பரவசத்துடன் ஓடிச்சென்று கதவைத் திறந்தான் ஆப்தே. வெளியே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச் செய்தன. அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன. பேயறைந்தவன்போல் ஆனான். காரணம் வெளியே நின்று கொண்டிருந்தது அவன் காதலி அல்ல; போலீசார்! காமத்தால் மதியிழந்த ஆப்தே அதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்தவனாக போலீசாரிடம் சரண் அடைந்தான்.
போலீசார் தயாராகக் கொண்டு போயிருந்த விலங்கை அவன் கைகளில் மாட்டினர். அதே அறையில் பதுங்கியிருந்த கார்கரேயும் கைது செய்யப்பட்டான். இதைத்தொடர்ந்து காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிப்ரவரி 15_ந்தேதிக்குள் கைது செய்யப்பட்டனர்.

கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே, மராட்டியத்தில் உக்சான் என்ற இடத்துக்கு அருகே கைது செய்யப்பட்டான். புனாவில் உள்ள காடுகளில் அலைந்து திரிந்துவிட்டு திரும்பிய திகம்பர் பாட்ஜே, ஒரு காளி கோவில் அருகே பிடிபட்டான். பாட்ஜேயின் வேலைக்காரன் இஸ்தியா பம்பாயில் போலீசாரிடம் சிக்கினான். ஜனவரி 20_ந்தேதி பிர்லா மாளிகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது கடைசி நேரத்தில் காந்தியைக் கொல்ல முடியாது என்று மறுத்துவிட்ட சாமியார் பாட்ஜே போலீஸ் தரப்பு சாட்சியாக ("அப்ரூவர்") மாறினான்.


"ஒருநாள் கோட்சேயும், ஆப்தேயும் இந்து மகா சபை தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பேச்சு முடிந்ததும் வாசல் வரை வந்து அவர்களை சவர்க்கார் வழியனுப்பினார். அப்போது வெற்றியோடு திரும்புங்கள்" என்று வாழ்த்தினார்" என்று போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் பாட்ஜே கூறினான். அந்த அடிப்படையில் வீரசவர்க்காரும் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி வாங்க உதவி புரிந்ததாக குவாலியரை சேர்ந்த சதாசிவ பார்ச்சூர் என்ற டாக்டரும் கைதானார்


மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரிக்க நான்கு மாத காலம் பிடித்தது. இந்த வழக்கை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக ஆத்மசரண் நியமிக்கப்பட்டார். இந்த நீதிமன்றத்தில் 1948 மே 27_ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்:




(1) நாதுராம் விநாயக் கோட்சே. வயது 37. ஆசிரியர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.


(2) நாராயண் தாதாத்ரேய ஆப்தே. வயது 34. நிர்வாக இயக்குனர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.


(3) விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே. வயது 38. "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" உரிமையாளர். ஆமத்நகர்.


(4) திகம்பர ராமச்சந்திர பாட்ஜே. வயது 37. ஆயுத விற்பனையாளர், புனா. இவர் அரசாங்க தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.


(5) கோபால் கோட்சே. வயது 27. நாதுராம் கோட்சேயின் தம்பி. ஸ்டோர் கீப்பர், ராணுவ கிடங்கு, புனா.


(6) மதன்லால் பாவா. வயது 20. அகதி. புனா.


(7) சங்கர் கிஸ்தியா. வயது 20. பாட்ஜேயின் வீட்டு வேலைக்காரன்.


(8) சதாசிவ பார்ச்சூர். வயது 47. டாக்டர். குவாலியர்.


(9) விநாயக் தாமோதர் சவர்க்கார். வயது 65. பாரிஸ்டர் மற்றும் நிலக்கிழார், பம்பாய். (மேற்கண்ட 9 பேர்களுடன் கங்காதர் தாந்த்வாதி, கங்காதர் ஜாதவ், சூர்யோதவ் சர்மா என்ற மூவரும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இறுதிவரை போலீசாரிடம் சிக்கவில்லை) இந்த வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகளாக 149 பேர் இடம் பெற்றிருந்தனர்.
காந்தியை சுட்டுக் கொல்ல கோட்சே பயன்படுத்திய "கறுப்பு பெரட்டா" துப்பாக்கி, கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கொலையாளிகளின் உடைகள், சாமியார் பாட்ஜே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.


வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடந்தது. பத்திரிகை நிருபர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் விசாரணையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரும்பிய வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும், வாதத்தை எடுத்து வைக்கவும், ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டனர். 1948 ஜுன் 22_ந்தேதி விசாரணை தொடங்கியது.


காந்தி கொலையை தடுக்க முடியாமல் போனாலும், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், சாட்சிகளை தயார் செய்வதிலும் போலீசார் திறமையாக செயல்பட்டார்கள். போலீஸ் தரப்பு சாட்சிகள் சிலரின் சாட்சியங்கள் வருமாறு:-
மிஸ் மனோரமா சால்வே:_ எனக்கு ஆப்தேயைத் தெரியும். ஜனவரி 28_ந்தேதி பம்பாயில் உள்ள "ஸீ கிரீன்" ஓட்டலில் அவரை சந்தித்தேன். ஜனவரி 31_ந்தேதி டெல்லி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் டெல்லி "இந்து மகா சபை"க்கு அவர் பெயரில் தந்தி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி தந்தி கொடுத்தேன்.
ராம்சிங் (இந்து மகாசபை அலுவலக கூர்க்கா):_ ஜனவரி 20_ந்தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேரை இந்து மகாசபை அலுவலகத்தில் பார்த்தேன். அவர்கள் பகல் 12 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இரவு 8 மணிக்கு பதற்றத்துடன் திரும்பி வந்தார்கள். தங்கள் சாமான்களுடன் அவசரமாகத் திரும்பினார்கள்.


பேச்சிகா (மெரினா ஓட்டல் மானேஜர்):_ கோட்சேயும், ஆப்தேயும் எங்கள் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அப்போது, கார்கரே, மதன்லால், பாட்ஜே ஆகியோர் வந்து அவர்களை சந்தித்தார்கள் (கோட்சேயையும், மற்றவர்களையும் அடையாளம் காட்டினார்).


காளிராம் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சே தன் துணிகளை என்னிடம் கொடுத்து சலவை செய்து கொடுக்குமாறு சொன்னார். அந்தத் துணிகளை சலவைத் தொழிலாளியிடம் கொடுத்தேன்.


கன்யாலால் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சேயின் துணிகளில் "என் வி ஜி" என்று ஆங்கிலத்தில் சலவைக்குறி போடப்பட்டிருந்தது. அந்தத் துணிகளை நான் சலவை செய்து கொடுத்தேன்.


சோத்ராம் (பிர்லா மாளிகை தொழிலாளி):_ ஜனவரி 20_ந்தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக கார்கரே, மதன்லால் ஆகியோர் பிர்லா மாளிகையை ஒட்டியுள்ள என் குடியிருப்பு வழியாக பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு பின்புறம் சென்றார்கள். அங்கு செல்ல அனுமதிப்பதற்காக எனக்கு 20 ரூபாய் கொடுத்தனர்.


பேராசிரியர் ஜெயின்:_ காந்தியை கொலை செய்யப்போவதாக மதன்லால் என்னிடம் சொன்னான். இவ்வாறு கொலை சதி பற்றி பல சாட்சிகள் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். சாட்சிகள் இந்தி, மராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சாட்சியம் அளித்தனர். அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், சாட்சியத்தை பதிவு செய்ய நீண்ட நேரம் பிடித்தது.


"கொலை செய்வதற்கு நான் சதி செய்யவில்லை" என்று ஆப்தே மறுத்தான். வீரசவர்க்காரும், கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:-


"நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவன். பின்னர் இந்துமகாசபையைத் தொடங்கினேன். இந்து மகாசபை அலுவலகத்திற்கு பலரும் வந்து போவார்கள். அதுபோல் கோட்சேயும், ஆப்தேயும் வந்திருக்கிறார்கள். என்னை கோட்சேயும், ஆப்தேயும் சந்தித்து காந்தியைக் கொலை செய்யப்போவது பற்றி பேசியதாகவும், நான் வாசல் வரை வந்து "வெற்றியுடன் திரும்புங்கள்" என்று வாழ்த்தி வழியனுப்பியதாகவும் போலீஸ் தரப்பு சாட்சி பாட்ஜே கூறுவது பொய்.


நாங்கள் பேசியபோது பாட்ஜே அந்த இடத்தில் இல்லை. அப்படியிருக்க என்ன பேசினோம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் கூறுவது அனைத்தும் கற்பனை." இவ்வாறு சவர்க்கார் கூறினார்.

தனக்கு மரண தண்டனை கிடைக்கப்போவது உறுதி என்று கோட்சேக்குத் தெரிந்திருந்தது.அதன் பிறகு நடந்தவை அனைவர்க்கும் தெரிந்ததே மகாத்மாவை கொன்றவனுக்கு இதை விட பெரிய தண்டனை வேற என்ன கொடுக்க முடியும்?