செவ்வாய், 17 டிசம்பர், 2013

சுவையான சிக்கன் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
நெய் - 150 கிராம்
பட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் - 500 கிராம்
தக்காளி -500 கிராம்
இஞ்சி - 11/2 ஸ்பூன்
பூண்டு - 11/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா - 11/2 கப்
ப. மிள்காய் - 5
தயிர் - 1கப்
சிகப்பு மிளகாய் தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன்
தணியா பொடி-1 டீஸ்பூன்
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:

ஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்

பின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.

ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்

சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்

தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்

அரிசியை போட்டு நன்கு கிளரவும்

அரிசிபாதிவேகும்வரைதீயை அதிகமாகவைக்கவும்

முக்கால்பகுதிவெந்தவுடன்தீயைசுருக்கவும்பாதி எலுமிச்சைஜீஸ்ஊற்றவும்

சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்

10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி

சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக