செவ்வாய், 31 டிசம்பர், 2013

உணவை ஜீரணம் செய்வது எப்படி?

நன்றி அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்துப் பொருள்களும் தரமான பொருளாக ரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.
உணவை இப்படி சாப்பிட வேண்டும்; அப்படி சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிட வேண்டும்; அதைச் சாப்பிட வேண்டும்; இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்லபடியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து “நாங்க ரெடி. உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்குவதற்குத் தயார்” என்று உடல் நம்மிடம் பேசும் பாஷைதான் பசி.
பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நம் சிகிச்சையில் மிக, மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு எல்லாம் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு.
உதாரணமாக காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை. பெரிதாக உடலுக்கு நீங்கள் எந்த உழைப்பும் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பகல் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இரண்டு மணியாகிவிட்டது சாப்பிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் பசிக்கிறதா என்று யோசித்தோமா என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் ரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு பகல் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும்.
ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது.
உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான். இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத் தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும்? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரண்டு மணிக்குச் சுரந்து விடும். இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப் போகும். எனவே, பசி எடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரம் நேரத்திற்குச் சாப்பிட்டால் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் நோய் வராது. வந்த நோயும் குணமாகும்.
ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்று யார் கண்டுபிடித்த சட்டம் இது? சிலருக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். சிலருக்கு உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் உணவைச் சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகுதான் சாப்பிடவேண்டும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்த பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கும் மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிகமுக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடைக்கும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம். எல்லாராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள். போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு உணவு இடைவேளை, இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒரு வேளை அப்பொழுது பசி இல்லையென்றால் என்ன செய்வது என்று கேள்வி வரும். மீண்டும் சொல்கிறேன். சில நேரங்களில் பசி இல்லாமல் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் நம்மால் முடிந்த இடங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே, தயவு செய்து பசி எடுத்த பிறகு மட்டுமே உணவை உண்ணுங்கள்.
2.உணவில் எச்சில் கலக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே நல்ல பொருளாக ரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்ட பொருளாக ரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறைய நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட ஓர் உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் ஜீரணிக்காத ஓர் உணவு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இல்லை நாங்கள் எச்சில் கலந்து தான் சாப்பிடுகிறோம் என்று எல்லாரும் சொல்வோம். ஆனால் எச்சில் கலப்பது கிடையாது.
சாப்பிடும் பொழுது உணவை மெல்லும் பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மெல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுது தான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப் பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தைக் கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவை வாய்க்குள் அனுப்புவதற்கு மட்டும் உதட்டைப் பிரியுங்கள். உணவு வாய்க்குள் நுழைந்த உடன் உதட்டைப் பிரிக்காமல் மென்று விழுங்கும் வரை உதட்டைப் பிரிக்காமல் இருங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. ஏனென்றால் அந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
சில வெளிநாட்டுக்காரர்கள் நம்மூரில் வந்து சாப்பிடும் பொழுது வேடிக்கை பாருங்கள். அவர்கள் உதட்டைப் பிரிக்காமல் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உதட்டைப் பிரித்துச் சாப்பிடுவதன் மூலமாக இந்த நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறது. உடனே சில நாடுகள் புத்திசாலி என்றும் சில நாடுகள் முட்டாள்கள் என்றும் தவறாக நினைத்து விடாதீர்கள். சில நாடுகளில் மனரீதியான நோய்களுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதட்டை மூடிச் சாப்பிடும் அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்கள் அனைவரும் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டு மனநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தினமும் பல மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சிலநாடுகளில் உடல் ஒழுங்காக இல்லை. ஆனால், மனம் ஒழுங்காக இருக்கிறது. சில நாடுகளில் மனம் ஒழுங்காக இல்லை. ஆனால், உடல் ஒழுங்காக இருக்கிறது. எனவே மருந்து, மாத்திரை கம்பெனிகளுக்கு எல்லா நாட்டிலும் வியாபாரம் திருப்தியாக நடக்கிறது. எனவே, தயவு செய்து இனிமேல் ஒவ்வொரு வாய் உணவையும் உதட்டை மூடி மென்று விழுங்குங்கள்.
உதட்டை மூடிச் சாப்பிடுவதால் நேரம் அதிகமாகும் என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரம் அதிகமாகாது, குறைவுதான் ஆகும். நீங்கள் ஒரு சப்பாத்தியை வாயில் வைத்து உதட்டைப் பிரித்து 40 முறை மெல்லுங்கள். சப்பாத்தி, சப்பாத்தி போலவே இருக்கும். கூழ் போல ஆகாது. ஆனால் உதட்டை மூடி நான்கு முறை மெல்லுவதால், சப்பாத்தி கூழ் போல மாறிவிடும். விழுங்க வேண்டிய வேலையே இல்லாமல் மைசூர்பா போல வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும். உதட்டைப் பிரித்து ரொம்ப நேரம் சாப்பிடுவதை விட உதட்டை மூடி கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். எப்பொழுது உதட்டை மூடி மெல்லுகிறோமோ எச்சிலுக்கு ஒரே சந்தோஷம். காற்று என்ற எதிரி இல்லை என்பதால் சீக்கிரமாக உணவில் உள்ள அனைத்து மூலக் கூறுகளையும் பிரித்து அதை நல்லபடியாக ஜீரணம் செய்கிறது.
இந்த முறையில் சாப்பிடும் பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும். தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும். ஏனென்றால் ஐம்பது வருடங்களாக இல்லாத புதுப் பழக்கம் அல்லவா? அப்படித்தான் வலிக்கும். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு ஒரு வாரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம்.
எனவே, சிகிச்சையில் இரண்டாவது மிக மிக முக்கியமான விஷயம் சாப்பிடும் பொழுது வடை, போண்டா, பொங்கல், ஊத்தப்பம் எது எப்பொழுது யார் சாப்பிட்டாலும் உதட்டை மூடி மென்று விழுங்கும் வரை உதட்டைப் பிரிக்கக் கூடாது.
3.சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் செய்யும். சாப்பிடும் பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துச் சாப்பிடும் பொழுது, சரியாக ஜீரணம் செய்வது கிடையாது. ‘நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம்? ஜீரணம் வயிற்றில்தானே நடக்கிறது? அது எப்படி பாதிக்கும்? என்ற சந்தேகம் வரும். நம் மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும்.
உதாரணமாக நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம்? உடம்பில் எந்தப் பட்டனை (சுவிட்சை) அழுத்தினால் சிறுநீர் வருகிறது? அதற்கென்று தனியாக ஒரு பட்டனும் கிடையாது. மனத்தால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா? எனவே மனம் நினைத்தால் மூத்திரப் பையின் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல் மனத்தால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனத்தால் நினைத்தால் நம் உடல் உறுப்புகளை இயக்க முடியும். நோய் முதலில் மனத்தில்தான் தோன்றுகிறது. பின்னர் மனம் தான் உறுப்புகளுக்கு நோயை உண்டாக்குகிறது. அதே போல் நாம் ஆரோக்யமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும்.
உதாரணம்-நாம் தூங்கும் பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போல் காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரென கனவு கலைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும் பொழுது நம் இருதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும். பட படவென இருக்கும். உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். ‘நாம் கனவில்தானே ஓடினோம்? பின்னர் ஏன் வியர்வை வந்தது, நெஞ்சு படபடக்கிறது? ஏனென்றால் கனவில் ஓடுவது போல் மனம் நினைத்துப் பார்க்கும் பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தியை இழக்கிறோம். அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இந்த 2 உதாரணம் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலிலுள்ள அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும்.
எனவே, உணவை உண்ணும் பொழுது நம் கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாகச் சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும் பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால் தான் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தயவு செய்து இனி சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வையுங்கள்.
ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். “ஐயா! உலகில் நோய்களுக்கான காரணம் என்ன?” என்று, அந்த ஞானி கூறினார் “சாப்பிடும் பொழுது யாரும் சாப்பிடுவதில்லை என்று.” மீண்டும் கேட்டார்கள். “உலகிலுள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?” அதற்கு அந்த ஞானி சொன்னார் “சாப்பிடும் பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும்” என்று. இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் உள்ளது. சாப்பிடும் பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன? சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை.
எனவே சாப்பிடும் பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து இந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவர்க்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும். நம் குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோய்கள் சற்றுப் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டு, சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள்.
உணவு சாப்பிடும் பொழுது, உணவைக் கையில் எடுத்து ‘இந்த உணவு வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி ரத்தமாக மாறி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது’ என்ற எண்ணத்தில் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.
“பசியின்றி எதையும் உண்ணாதீர்கள்-உண்ணும் பொழுது
உணவைத் தவிர எதையும் எண்ணாதீர்கள்”
எனவே, சாப்பிடும் பொழுது தயவு செய்து கவனத்தை உணவில் வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம்.
நன்றி: அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
தொடரும்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக